(143)
சோத்தம் பிரான்என்று இரந்தாலும் கொள்ளாய் சுரிகுழ லாரொடு நீபோய்
கோத்துக் குரவை பிணைந்துஇங்கு வந்தால் குணங்கொண் டிடுவனோ நம்பீ
பேர்த்தும் பெரியன அப்பம்த ருவன் பிரானே திரியிட வொட்டில்
வேய்த்தடந் தோளார் விரும்பு கருங்குழல் விட்டுவே நீஇங்கே வாராய்.
பதவுரை
| பிரான் |
– |
தலைவனே! |
| சோத்தம் |
– |
உனக்கு ஓரஞ்ஜலி |
| என்று |
– |
என்று சொல்லி |
| இரந்தாலும் |
– |
(வரவேணுமென்று) கெஞ்சிக் கேட்டுக்கொண்டாலும் |
| கொள்ளாய் |
– |
(நீ என் சொல்லைக்) கேட்டு வருகிறதில்லை; |
| நம்பீ |
– |
பூர்ணனே! |
| நீ |
– |
நீ |
| சுரி குழலாரொடு |
– |
சுருண்ட கூந்தலையுடைய பெண்களோடு |
| போய் |
– |
(ஏகாந்தஸ்தலத்திலே) போய் |
| கோத்து |
– |
கைகோத்து |
| குரவை பிணைந்து |
– |
குரவைக் கூத்தாடி |
| இங்கு வந்தால் ; |
|
(பின்) இங்கே வந்தால் |
|
(நீ அப்படி செய்ததை) |
||
| குணம் கொண்டிடுவனோ |
– |
(உனக்குத்) தகுதியானதாக (நான்) கொள்வனோ? |
| பிரானே |
– |
உபகாரகனே! |
| திட இட ஒட்டில் |
– |
திரியை (உன்காதிலே) இடலாம்படி நீ யிசைந்தால் |
| பேர்த்தும் |
– |
மறுபடியும் மறுபடியும் |
| பெரியன அப்பம் |
– |
பெரிய பெரிய அப்பங்களை |
| தருவன் |
– |
கொடுப்பேன்; |
| வேய் தட தோளார் |
– |
மூங்கில் போன்ற பெரிய தோள்களையுடைய மகளிர் |
| விரும்பு |
– |
விரும்புகைக்கு உரிய |
| கரு குழல் விட்டுவே |
– |
கருநிறமான கூந்தலையுடைய விஷ்ணுவே! |
|
(நீ இங்கே வாராய்). |
||
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
*** – கண்ணபிரான் ‘நேற்று நீ என்னை அழைக்கையில் நான் வர, அப்போது வந்ததைக் குணமாகக் கொள்ளாமல் என்னை அடித்தவளன்றோ நீ’ என்ன; யசோதை நீ பெண்களுடன் தனியிடத்திலே குரவையாடி வந்தால் அதை நான் எப்படி குணமாகக் கொள்ளக்கூடு மென்கிறாளென்க. பேர்த்தும் – புநி! புநி!; இது சிறிது இது சிறிது என்றுசொல்லி யசோதை கொடுக்கும் அப்பங்களைக் கண்ணன் தள்ளிவிடவும் பின்னும் அவன் விரும்பும்படி பெரிய பெரிய அப்பங்களைக் கொடுப்பேனென்று கருத்து. குரவைக் கூத்தாவது – ???? இத்யாதிப்படியே – ஒவ்வொரு ஆய்ச்சியின் பக்கத்திலும் ஒவ்வொரு கண்ணனாகத் தோன்றி நின்று கைகோத்தாடல்; இதைத் தான் ராஸக்ரீடை என்பது என்பர் – ஸம்ப்ரதாயிக ஆர்யவ்ருத்தர்.
சிலப்பதிகாரம் என்னும் தமிழ்க்காப்பியத்தில் ஆய்ச்சியர் குரவையும் என்றவிடத்து அடியார்க்கு நல்லாருரையில், “குரவை யென்பது கூறுங்காலைச் செய்தோர் செய்த காமமும் விறலு மெய்தவுரைக்கு மியல்பிற்றென்ப எனவும் துரவை யென்ப” தெழுவர் மங்கையர் செந்நிலை மண்டலக் கடகக் கைகோத்தந்நிலை கொட்பநன் றாடலாகும் எனவுஞ் சொன்னாராகலின் இதுவும் ஆய்ச்சியரிடத்து நிகழ்தலான் ஆய்ச்சியர் குரவையெனக் கூத்தாற் பெற்ற பெயர் என்று உரைத்தவாறு காண்க. “குரவையென்பது கைகோத்தாடல்” என்று ஸாமாந்யமாகச் சொன்னான் ஒரு தமிழன்.
English Translation
O Vishnu! My Master! Even when I beg of you saying, “Please”, you do not come. My Lord, if you come here after going out with curly-haired girls to dance the Rasa, would I take it as a virtue? I will give you bigger-than-the-biggest Appam. My dark haired Lord, dear to the girls with long arms that desire to hold you, come hither.
