(1339)

(1339)

ஆநிரை மேய்த்தன் றலைகட லடைத்திட்டு அரக்கர்தம் சிரங்களை யுருட்டி,

கார்நிறை மேகம் கலந்தோ ருருவக் கண்ணனார் கருதிய கோயில்,

பூநீரைச் செருந்தி புன்னைமுத் தரும்பிப் பொதும்பிடை வரிவண்டு மிண்டி,

தேனிரைத் துண்டங் கின்னிசை முரலும் திருவெள்ளி யங்குடி யதுவே.

 

பதவுரை

அன்று

முற்காலத்தில்

ஆ நிரை மேய்த்து

(கோபாலகிருஷ்ணனாய்ப் பிறந்து) பசக்கூட்டங்களை மேய்த்தவனாயும்

அலை கடல் அடைத்திட்டு

அலையெறிகின்ற கடலிலே அணைகட்டி (இலங்கையிற் சென்று)

அரக்கர்தம் சிரங்களை உருட்டி

ராக்ஷஸர்களுடைய தலைகளை அறுத்துத் தள்ளினவனாயும்

கார்நிறை மேகம் கலந்தது

கார்காலத்தில் திரண்டெழுந்த மேகத்தோடொத்த

ஓர் உருவம்

விலக்ஷணமான வடிவையுடையனாயுமிருக்கிற

கண்ணனார்

கண்ணபிரான்

கருதிய கோயில்

திருவுள்ளமுவந்த திவ்ய தேசம் (எதுவென்றால்)

நிரை பூ

வரிசை வரிசையாகப் பூத்திருக்கிற

செருந்தி

ஸுரபுன்னை மரங்களினுடையவும்

முத்து அரும்பி

முத்துப்போன்ற மொக்குகள் அரும்பியிருக்கிற

புன்னை

புன்னை மரங்களினுடையவும்

பொதும்பிடை

பொந்துகளிலே

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- வரிவண்டு மிண்டி அங்கு தேன் இரைத்து உண்டு – அழகிய வண்டுகள் நெருங்கியிருந்து அவ்விடத்தில் மதுவை ஆரவாரத்தோடே பருகி இன் இசை முரலும் – மதுரமான இசைகளைப்பாடா நிற்கப்பெற்ற திருவெள்ளியங்குடி அதுவே.

 

English Translation

The Lord who then grazed cows, built a bridge on the ocean and killed all the Rakshasa, has the dark hue of rain-laden cloud is Krishna the Lord who resides in flower groves of Punnai, spilling their pearl buds, -Serund! trees harbouring bumble-bees drinking the nectar, singing in temple of iruvelliyangudi, that is it!

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top