(1336)
எந்தை தந்தை தம்மா னென்றென் றெமெரே றெமரெ ழேளவும்,
வந்து நின்ற தொண்டரோர்க்கே வாசி வல்லீரால்,
சிந்தை தன்னுள் முந்தி நிற்றிர் சிறிதும் திருமேனி,
இந்த வண்ண மென்று காட்டீர் இந்த ளூரீரே!
பதவுரை
|
இந்தளூரீர்!; |
||
|
எந்தை தந்தை தம்மான் என்று என்று |
– |
என் தகப்பனார் அவர் தகப்பனார் அவர் தகப்பனார் என்கிற முறைமையில் |
|
எமர் ஏழ் அளவும் |
– |
எமது முன்னோர்கள் எழுதலை முறையாக |
|
வந்து நின்ற |
– |
தேவரீருடைய கைங்கரியத்திற்கு இசைந்து வந்திருக்கின்ற |
|
தொண்டரோர்க்கே |
– |
அடியோங்கள் விஷயத்திலேயே |
|
வாசி வல்லீர் |
– |
கணக்குப் பார்க்கின்றீர்; |
|
ஆல் |
– |
ஐயோ!; |
|
சிந்தை தன்னுள் முந்தி நிற்றிர் |
– |
எமது நெஞ்சுக்குள்ளே முற்பட்டுவந்து நிற்கின்றீர்; |
|
திருமேனி இந்த வண்ணம் என்று சிறிதும் காட்டீர் |
– |
திருமேனியின் நிறம் இன்னதென்று சிறிதேனும் காட்டுகின்றிலீர் |
English Translation
O Lord of indalur! My father, and his fathers before him, for seven generations, have been faithfully serving you as our only master. Alas, you do not inquire of us; you neither stay in our thoughts, nor let us see your body’s hue even slightly.
