(1335)
முன்னிவண்ணம்பாலின் வண்ணம் முழுதும் நிலைநின்ற*
பின்னைவண்ணம் கொணடல்வண்ணம் வண்ணமெண்ணுங்கால்*
பொன்னின்வண்ணம்மணியின் வண்ணம் புரையுந்திருமேனி*
இன்னவண்ணமென்றுகாட்டீர் இந்தளூரிரே!
பதவுரை
|
இந்தளூரீர்!; |
||
|
வண்ணம் எண்ணுங்கால் |
– |
தேவரீருடைய திருமேனி நிறத்தை ஆராயுமளவில், |
|
முன்னை வண்ணம் |
– |
முதலதான கிருதயுகத்தில் கொண்ட நிறம் |
|
பாலின் வண்ணம் |
– |
பாலின் நிறமான வெண்மையாயிருக்கும்; |
|
முழுதும் நிலை நின்ற பின்னை வண்ணம் |
– |
எப்போதும் நிலைநிற்பதாயும் பிந்தின கலியுகத்திற்கொண்டதாயுமுள்ள நிறம் |
|
கொண்டல் வண்ணம் |
– |
காளமேகத்தின் நிறமான கருமையாம்; |
|
பொன்னின் வண்ணம் மணியின் வண்ணம் புரையும் திருமேனி |
– |
பொன்னிறத்தையும் நிலமணி நிறத்தையு மொத்திருக்கின்ற (தேவரீருடைய திருமேனி) |
|
இன்ன வண்ணம் என்று காட்டீர் |
– |
(கீழ்ச் சொன்ன நிறங்களுள்) இன்ன நிறமுடையதென்று தெரியக் காட்டியருளவேணும் |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- எம்பெருமான் ஒவ்வொரு யுகத்திலும் நிறத்தைக்கொள்வன்; கிருத யுகத்திலுள்ளவர்கள் ஸத்வகுணம் நிறைந்தவர்களாய் சுத்தமான நிறத்தை உகக்குமவர்களாகையாலே அவர்கட்காகப் பால்போன்ற நிறத்தைக்கொள்வன்; த்ரேதாயுகத்திலே சிவந்த நிறத்தைக்கொள்வன்; த்வாபரயுகத்தில் பசுமை நிறத்தைக் கொள்வான்; கலியுத்தில் எந்த நிறங்கொண்டாலும் ஈடுபடுவா ரில்லாமையாலே இயற்கையான நீலநிறத்தைக்கொன்வன்.
இந்தளூரீர்! ஊமக்குப் பல நிறங்கள் உள்ளனவாக சாஸ்த்ரங்களில் விளங்காநின்றது; இங்கு அர்ச்சையாக எழுந்தருளியிருக்கு மிருப்பிலே எந்தநிறம் கொண்டிருக்கிறீர் என்பதை அடியேன் அறியவேண்டாவோ? “இதோபாராய், இதுவே என்வண்ணம்” என்று சொல்லி வடிவைக் காட்டியருளீர் என்கிறார்.
English Translation
O Lord of Indolur! In the beginning you are white, in the end you are black, The colours in-between are red and yellow. Alas, you do not let us see what colour you are now.
