(1333)

(1333)

சொல்லா தொழிய கில்லேன் அறிந்த சொல்லில், நும்மடியார்,

எல்லா ரோடு மொக்க வெண்ணி யிருந்தீ ரடியேனை,

நல்ல ரறிவீர் தீயா ரறிவீர் நமக்கிவ் வுலகத்தில்,

எல்லா மறிவீ ரீதே யறியீர் இந்த ளூரீரே.

 

பதவுரை

இந்தளூரீர்!–;

சொல்லாது ஒழிய கில்லேன்

(அடியேன் சொல்ல நினைத்ததைச்) சொல்லாதிருக்க முடியவில்லை;

அறிந்த சொல்லில்

நான் அறிந்தவற்றைச் சொல்லத் தொடங்கினால்

(இதனைச் சொல்லுகிறேன் கேளீர்;)

இவ்வுலக நடை யெல்லாமும் தெரிந்துகொண்டிருக்கிறீர்;

அடியேனை

(உம்மைப் பிரிந்து தரிக்க மாட்டாத) அடியேனை

நும் அடியார் எல்லாரோடும் ஒக்க எண்ணி இருந்தீர்

உம்முடைய மற்ற அடியவர்கள் எல்லாரோடும் ஸமமாக நினைத்திருக்கிறீர்;

நல்லார் அறிவீர்

நல்லவர்களையும் தெரிந்து கொண்டிருக்கிறீர்;

தீயார் அறிவீர்

தீயவர்களையுந் தெரிந்து கொண்டிருக்கிறீர்;

இ உலகத்து எல்லாம் அறிவீர்

இவ்வுலக நடையெல்லாமும் தெரிந்துகொண்டிருக்கிறீர்;

நமக்கு ஈதே அறியீர்

என்னுடைய தன்மையொன்றையே அறியமாட்டாதவராயிருக்கிறீர்.

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- மீண்டு மீண்டும் நிர்ப்பந்திக்கின்றீரே;  ஆழ்வீர்! இஃது உமக்குத்தகாது என்று எம்பெருமான் திருவுள்ளமாக, அதற்கு ஆழ்வார் விண்ணப்பஞ் செய்கிறார்.  இந்தளூரீர்! அடியேன் விண்ணப்பஞ் செய்ய நினைத்த விஷயத்தைக் கூசாமல் விண்ணப்பஞ் செய்துவிடுகிறேன்; சேஷபூதன் சேஷியை நிர்ப்பந்திக்கலாகாது என்று முறையறிந்து இருக்கமாட்டுகின்றிலேன்; ஸர்வஜ்ஞரான உமக்கும் தெரியாத விஷயம் ஒன்றுண்டு என்று அடியேன் நினைத்திருக்கிறேன்.  உமக்குப் பல்லாயிரம் பேர்கள் அடியாருண்டு.  ‘மற்ற அடியார்களெல்லாரையும்போலே இக்கலியனும் ஓரடியான்’ என்று நீர் நினைத்திருக்கின்றீரத்தனையல்லாது எனக்குள்ள வாசியைச் சிறிதும் அறிகின்றிவீர்.  “ஊர்த்வம் மாஸாந்நஜீவிஷ்யே” (ஒரு மாதம் வரையில் உயிர்தரித்திருப்பேன்) என்று சொன்ன அசோகவனிகைப் பிராட்டியையும் என்னையும் ஒருதட்டாக நினைத்திருக்கிறீரே யொழிய ‘ஒரு நொடிப்பொழுதும் நம்முடைய பிரிவைப் பொறுக்கமாட்டாத ஸுகுமார ஸ்வபாலன் இவன்’ என்று என்னுடைய வாசியை அறிந்திலீர் என்கிறார்.

(நல்லாரறிவீர் தீயாரறிவீர்) உம்மைவிட்டுப் பிரிந்து தரிக்கமாட்டாதாருடைய தன்மையும் அறிவீர், உம்மையொழிந்தும் ஜீவித்திருப்பாருடைய தன்மையும் அறிவீர்.  இப்படி பிரித்துச் சொல்லுவானேன்?  (இவ்வுலகத்து எல்லாமறிவீர்)  “அஜ்ஞாதம் நாஸ்திதே கிஞ்சித்த்ரிஷு லோகேஷுராகவ!” என்று ஸ்ரீராமாயாணத்தில் முறையிட்டது அறிவோம்.  நீர் அத்தனை ஸர்வஜ்ஞராயிருந்துவைத்தும் (ஈதேயறியீர்) ‘திருமங்கை மன்னனுடைய ப்ரக்ருதி லோகவிலக்ஷணம்’ என்பதை மாத்திரம் தெரிந்துகொண்டிலீர்.  (இந்தளூரீரே) நீர் திருவிந்தளூரிலே வந்து நிற்கிற காரியத்தை மறந்தீரே.

முதலடியில் ‘அறிந்த’ என்பது பெயரெச்சமன்று; பலவின்பால் வினையாலணையும் பெயர் : அறிந்தவற்றை என்றபடி.

 

English Translation

O Lord of indolur I cannot refrain from saying it, let me say what I fee; you only think of me as yet another devotee, you know who is good and who is bad, you know everything about this world.  You only don’t know how to shower your grace on me.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top