(1329)

(1329)

சிந்தை தன்னுள் நீங்கா திருந்த திருவே மருவினிய

மைந்தா, அந்த ணாலி மாலே சோலை மழகளிறே

நந்தா விளக்கின் சுடரே நறையூர் நின்ற நம்பீ,என்

எந்தாய். இந்த ளூராய். அடியேற் கிறையு மிரங்காயே.

 

பதவுரை

சிந்தை தன்னுள் நீங்காது இருந்த திருவே மருவ இனிய மைந்தா

நெஞ்சிலே ஒரு நொடிப்பொழுதும் விட்டுப் பிரியாமலிருக்கிற செல்வமே!

மருவ இனிய மைந்தா

அநுபவிக்க அநுபவிக்க போக்யனாயிருக்கிற நித்யயுவாவே!,

அம் தண் ஆலி மாலே

அழகிய குளிர்ந்த திருவாலி நகர்ப்பெருமானே!,

சோலை மழகளிறே

சோலைக்குள்ளே வளர்ந்தஒரு யானைக்குட்டி போன்றவனே!

நந்தா விளக்கின் சுடரே

ஒரு நாளுமணையாதவிளக்குச் சோதிபோல் திகழுமவனே!

நறையூர் நின்ற நம்பீ

திருநறையூரில் எழுந்தருளியிருக்கிற பரிபூர்ணனே!

இந்தளுராய் என் எந்தாய்

திருவிந்தளூரில் எழுந்தருளியிருக்கிற எம்பெருமானே!

ஆடியேற்கு இறையும் இரங்காயே

அடியேன் விஷயத்தில் சிறிதும் கிருபைசெய்கிற யில்லையே!

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- கீழ்ப்பாசுரம் மிக்க தீநஸ்வரத்தோடே பேசியிருக்கச் செய்தேயும் இந்த;ரெம்பிரான் திருவுள்ளமிரங்கக் கண்டிலர்; பிரானே! கடலிலே நீர் வற்றுவதுண்டோ?  உன் திருவுள்ளத்திலும் இரக்கம் மாறுவதுண்டோ? இப்படியும் என்னைப் படுகொலையடிக்கலாமோ? பாவியேனுக்குச் சிறிதும் இரங்கியருள மாட்டாயோ? என்கிறார்.

சோலைமழகளிறே! – சோலைக்குள்ளே வளர்ந்தவொரு இளவானைக்கன்றுபோலே இனியனா யிருப்பவனே!.  திருமாலிருஞ் சோலையில் திகழும் யானைக்குட்டியே! என்றுமுரைக்கலாம்.

நந்தாவிளக்கின் சுடரே! – விளக்கில் திரியும் எண்ணெயும் புகையுமான அழுக்கு இன்றியே புகர்தான் ஒருவடிவு கொண்டதோ என்னும்படியாக ஜ்ஞாநஸ்வரூபனாய்ப் பிரகாசிப்பவனே! என்கை. இறையும் இரங்காய் – சிறிதேனும் இரங்கவேணும் என்றும் பொருளாம்.

 

English Translation

O Lord of indolur!  O Precious one remaining in my heart! O Prince sweet to approach! O Lord-adorable of Tiruvalil O Elephant roaming in Tirumalirumsolai! O Lamp-eternal of Manimadakkoyil! O Lord standing in Naraiyur! My own sweet Lord! See, you have no pity for me.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top