(1406)

(1406)

பொய்வண்ணம் மனத்தகற்றிப் புலனைந்தும் செலவைத்து,

மெய்வண்ணம் நினைந்தவர்க்கு மெய்ந்நின்ற வித்தகனை,

மைவண்ணம் கருமுகில்போல் திகழ்வண்ண மரதகத்தின்,

அவ்வண்ண வண்ணனையான் கண்டதுதென் னரங்கத்தே.

 

பதவுரை

பொய் வண்ணம் மனத்து அகற்றி

ப்ரக்ருதி ப்ராக்ருதங்களை மனத்தில் நின்றும் ஒழித்துவிட்டு

புலன் ஐந்தும் செலவைத்து

பஞ்சேந்திரியங்களையும் அப்பாற்படுத்தி

மெய்வண்ணம் நினைந்தவர்க்கு

உண்மையாகத் தன்னைச் சிந்திப்பவர்களுக்கு

மெய் நின்ற

தன் ஸ்வரூபத்தை உள்ளபடியே காட்டிக்கொடுக்கின்ற

வித்தகனை

ஆச்சர்யபூதனும்,

மை வண்ணம்

அஞ்சனத்தின் நிறம்போன்ற நிறத்தையும்

கரு முகில் போல் திகழ் வண்ணம் மரதகத்தின் அவ் வண்ணம்

காளமேகம் போல் விளங்குகின்ற நிறத்தையுடைய மரதகப் பச்சையின் அப்படிப்பட்ட நிறத்தையும்

வண்ணனை

தனக்கு நிறமாக வுடையனுமான பெருமானை.

யான் கண்டது தென் அரங்கத்தே–.

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- பொய்வண்ணன் மனத்தகற்றி = காண்கின்ற பிரபஞ்சமெல்லாம் மாயைத்தோற்றம் – பொய் – என்கிறார்கள் அத்வைதிகள்; அங்ஙனல்ல; ‘நிலை நில்லாதவை’ என்னும் பொருளிலும் ‘பொய்’ என்கிற சொல்லைப் பிரயோகிப்பதுண்டு; ஆகவே நிலைநில்லாத (-அஸ்திரங்களான) ப்ராக்ருத பதார்த்தங்களே இங்குப் பொய்வண்ணம் எனப்படுகின்றன; அவற்றை நெஞ்சிற் கொள்ளாமல், பஞ்சேந் திரியங்களையும் விஷயக்ராமங்களில் செல்லாதபடி தடுத்துத் தன்னையே உண்மையாகச் சிந்திப்பவர்கள் யாரோ, அவர்கட்குத் தன் ஸ்வரூபஸ்வபாவங்களை உள்ளபடி காட்டித் தந்தருள்பவன் எமபெருமான் என்கிறது முன்னடிகளில்.  ஆன்னவர்களுக்குக் காட்டிக்கொடுக்கும் திவ்யமங்கள விக்ரஹத்தைப் பரமபோக்யமாக வாயாரப் பேசுகிறார் பின்னடிகளில்.  அஞ்சனம் போலவும் காளமேகம் போலவும் மரகதம் போலவும் ஆகர்ஷகமான திருநிறம்பெற்ற பெருமானைத் திருவரங்கத்திலே கண்டேனென்றாராயிற்று.

 

English Translation

The real Lord who rids me of my falsities, controls my senses and resides as a prince in my heart, shining like a dark rain cloud, is a gem of radiant black hue, dark as the green emerald, -I have seen him in Southern Arangam amid cool waters.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top