(1397)
சேலுகளும் வயல்புடைசூழ் திருவரங்கத் தம்மானைச் சிந்தை செய்த,
நீலமலர்க் கண்மடவாள் நிறையழிவைத் தாய்மொழிந்த வதனை, நேரார்
காலவேல் பரகாலன் கலிகன்றி ஒலிமாலை கற்று வல்லார்,
மாலைசேர் வெண்குடைக்கீழ் மன்னவராய்ப் பொன்னுலகில் வாழ்வர் தாமே.
பதவுரை
|
சேல் உகளும் வயல் புடை சூழ் திருஅரங்கத்து அம்மானை |
– |
மீன்கள் துள்ளி விளையாடப் பெற்ற கழனிகளினால் சுற்றும் சூழப்பட்ட திருவரங்கத்திலுள்ள எம்பெருமானை |
|
சிந்தை செய்த |
– |
தியானித்துக் கொண்டிருக்கின்ற |
|
நீலம் மலர் கண்மடவான் நிறை அழிவை |
– |
கருநெய்தல் போன்ற கண்களை யுடையனான பரகால நாயகியினது அடக்கம் அழிந்தமையைக் குறித்து |
|
தாய் மொழிந்த அதனை |
– |
தாய்பேசின பாசுரமாக, |
|
நேரார் சாலன் |
– |
பகைவர்க்கு யமன் போன்ற வரும் |
|
வேல் |
– |
வேற்படையையுடையரும் |
|
பரகாலன் |
– |
பரகாலனென்ற திருநாமமுடையவருமான |
|
கலிகன்றி |
– |
திருமங்கையாழ்வார் |
|
ஒலி |
– |
அருளிச்செய்த |
|
மாலை |
– |
இச் சொல்மாலையை |
|
கற்று வல்லார் தாம் |
– |
ஓதி உணரவல்லவர்கள், |
|
மாலை சேர் வெண் குடை கீழ் |
– |
முத்துஸரங்கள் தொங்கவிடப் பெற்ற வெண்குடை நிழலில் |
|
மன்னவர் ஆய் |
– |
அரசர்களாயிருந்துகொண்டு |
|
(இஹலோக ஐச்வர்யங்களையநுபவித்துப் பின்பு) |
||
|
போன் உலகில் வாழ்வர் |
– |
பரமபதத்தில் நித்யாநுபவம் பண்ணப்பெறுவர். |
English Translation
This garland of Tamil songs by tall mansioned Mangai king kaliyan is in praise of the Lord of Ten-Tirupper reclining on a freckled serpent surrounded by bee-humming groves. Those who can sing and dance to it will reach high heaven.
