(1435)
அம்பொனா ருலக மேழும் அறியஆய்ப் பாடி தன்னுள்,
கொம்பனார் பின்னை கோலம் கூடுதற் கேறு கொன்றான்,
செம்பொனார் மதிள்கள் சூழ்ந்த தென்திருப் பேருள் மேவும்,
எம்பிரான் நாமம் நாளும் ஏத்திநா னுய்ந்த வாறே,
பதவுரை
|
அம் பொன் ஆர் உலகம் ஏழும் அறிய |
– |
அழகிய பொன்போற் சிறந்த ஏழுலங்களும் அறியும்படியாக |
|
ஆய்ப்பாடி தன்னுள் |
– |
திருவாய்ப்பாடியிலே |
|
கொம்பு அன்னார் பின்னை |
– |
வஞ்சிக் கொம்புபோன்ற நப்பின்னைப் பிராட்டியினுடைய |
|
கோலம் |
– |
திருமேனியை |
|
கூடுதற்கு |
– |
அணைவதற்காக |
|
ஏறு |
– |
எருதுகளை |
|
கொன்றான் |
– |
கொன்றொழிந்தவனும் |
|
செம் பொன் ஆர் மதிள்கள் சூழ்ந்த |
– |
செவ்விய பொன்போல் அழகிய திருமதிள்களாலே சூழப்பட்ட |
|
தென் திருப் பேருள் |
– |
தென் திருப்பேர் நகரில் |
|
மேவும் |
– |
பொருந்திவாழ்பவனுமான |
|
எம்பிரான் |
– |
எம்பெருமானுடைய |
|
நாமம் |
– |
திருநாமங்களை |
|
நாளும் |
– |
நாள்தோறும் |
|
ஏத்தி |
– |
ஸங்கீர்த்தநம்பண்ணி |
|
நான் உய்ந்த ஆறு ஏ |
– |
நான் உஜ்ஜீவித்த விதம் என்னே.. |
English Translation
In an open contest made known to the worlds, the Lord subdued seven bulls and killed them, for the sake of the sake of the slender Dame Nappinnai. He resides in Ten-Tirupper, where mansions are covered with gold. How easily have I attained him through chanting his names!
