(1324)
நாடி யென்றனுள் ளொங்கொண்ட நாத னென்றும், நான்மறைகள்
தேடி யென்றும் காணமாட்டாச் செல்வ னென்றும்,சிறை கொள்வண்டு
சேடு லவுபொழில் கொள்நாங்கைத் தேவ தேவ னென்றென்றோதி,
பாட கம்சேர் மெல்லடியாள் பார்த்தன் பள்ளி பாடுவாளே.
பதவுரை
|
பாடகம் சேர் மெல் அடியாள் |
– |
பாதச்சிலம்பு அணிந்த மிருதுவான அடிகளையுடைய என் பெண்ணானவள் |
|
நாடி என்தன் உள்ளம் கொண்டநாதன் என்றும் |
– |
தேடி வந்து என் மனதை இருப்பிடமாக் கொண்ட ஸ்வாமியென்றும், |
|
நால் மறைகள் தேடி என்றும் காணமாட்டா |
– |
நான்கு வேதங்கள் ஆராய்ந்து பார்த்து ஒருநாளும் காண முடியாத செல்வன் என்றும் – ஸ்ரீமான் எனறும், |
|
சிறை கொள் வண்டுசேடு உலவுபொழில் கொள் நாங்கை |
– |
சிறகுளையுடைய வண்டுகள் திரள்திரளாக உலாவப்பெற்ற சோலைகளை யுடைத்தான திருநாங்கூரில் எழுந்தருளியிருக்கிற |
|
தேவதேவன் என்று என்று ஓதி |
– |
தேவாதி தேவன் என்றும் பலகால் சொல்லிக்கொண்டு |
|
பார்த்தன் பள்ளி பாடுவாள்–. |
||
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- “பாதகடகம்” என்னும் வடசொல் பாடகம் எனச் சிதைந்தது; காலணிக்குப் பெயர்
English Translation
“He did seek and find me, then he took my heart and made me a slave!”, “Vedas try to reach him through their sacred chants and yet they never!”, “Bees abound in groves a Nangai, _Deva-deva Lord resides!”, My anklet-wearing tender-footed daughter sings of Parttan-Palli, O!
