(1395)

(1395)

உறவாது மிலளென்றென் றொழியாது பலரேசும் அலரா யிற்றால்,

மறவாதே யெப்பொழுதும் மாயவனே மாதவனே என்கின் றளால்,

பிறவாத பேராளன் பெண்ணாளன் மண்ணாளன் விண்ணோர் தங்கள்

அறவாளன், என்மகளைச் செய்தனகள் அம்மனை மீரறிகி லேனே.

 

பதவுரை

உறவு ஆதும் இவள் என்று என்று

‘தாய் தந்தையர் என்கிற உறவு முறைகளைச் சிறிதும் உடையளல்லள்’ என்று பலகால் சொல்லி

பலர் ஒழியாது ஏசும் அலர் ஆயிற்று

பலபேர்கள் எப்போதும் குறைகூறும்படியான பழி விளைந்திட்டது;

(இப்பெண்பிள்ளையோ வென்னில்)

மறவாதே எப்பொழுதும்

மறவாமல் ஸர்வகாலமும்

மாயவனே! மாதவனே! என்கின்றாள்;

பிறவாத பேராளன்

கருமங்காரணமான பிறப்பையுடையனாகாத பெருமை பொருந்தியவனும்

பெண் ஆளன்

பெண் பிறந்தாரைத் தனக்காகவுடையவனும்

மண் ஆளன்

மண்ணுலகத்தவர்களை ஆள்பவனும்

விண்ணோர் தங்கள் அறவாளன்

நித்யஸூரிகளுக்குப் பரமதார்மிகனாயிருப்பவனுமான பெருமான்

என் மகளை செய்தனகள் அம்மனைமீர் அறிகிலேன்

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- ‘தாய் என்றும் தந்தையென்றும் பல உறவுமுறையா இருக்கும்போது அவர்களையெல்லாம் த்ருணமாக நினைத்துத் தள்ளிவிட்டுத் “தெளிவிலாக்கலங்கல் நீர் சூழ் திருவரங்கத்துள் ஓங்கும், ஒளியுளார்தாமேயன்றே தந்தையும் தாயுமாவார்” என்று ஒரு 1. பரபுருஷனையே ஸகலவித பந்துவுமாக்க கொண்டுவிட்டாளே இச்சிறுமி’ என்று நாட்டார் பழிதூற்றும் படியாயிற்று – என்று தாய் சொல்லும் இப்பேச்சில் வெறுப்பும் உவப்பும் விளங்கும். ‘என் மகள் அலர் தூற்றலுக்கு ஆளாய்விட்டாளே?, நற்குடிக்குப் பெரும்பழி விளைந்திட்டதே!’ என்று வருந்திச் சொல்லுவதாக நாட்டார்க்குப் பொருள்படும்.  ஆபாஸ பந்துக்களை யெல்லாம் விட்டிட்டு “சேலேய் கண்ணியரும் பெருஞ்செல்வமும் நன்மக்களும், மேலாத் தாய்தந்தையும் அவரே யினியாவாரே” என்று ஆப்தபந்துவாகச் சொல்லப்பட்ட ஸ்ரீமந் நாராயணனையே இங்கொழிக்க வொழியாத உறவாகக் கொண்டாளே! என்கிற உவப்பு உள்ளுறையும்.

பழிச்சொல் மிகமிக, அபிநிவேசமும் மிகுமாதலால் நாட்டாருடைய பழிப்பே காரணமாக என்மகளுக்கு பகவத் விஷயப்ராவண்யம் அதிகரித்துச் செல்லுகின்றது என்கிறாள் இரண்டாமடியில்.  மறவாதே = ஒருகால் என்மகள் எம்பெருமானை மறந்திருந்தாலும், ஓயாதே அலர் தூற்றுமவர்கள் அவனையும் இவளையுஞ் சேர்த்துச் சொல்லிப் பழிக்கையினால் அதுகாரணமாக அவனுடைய ஸ்மரம் இவளுக்கு மாறுவதில்லை;  மறக்கவொட்டாமல் செய்பவர்கள் பழி தூற்றும் நாட்டார் என்க.  ‘ஆச்சரியமான குணசேஷ்டிதங்களை யுடையோனே! பிராட்டியை அநுபவிக்கும் பரமரஸிகனே!’ என்று சொல்லிக்கொண்டே போதுபோக்குகின்றாள் என்மகள்.

பெண்ணாளன் – பெண்பிறந்தாரையெல்லாம் இப்படி பிச்சேற்றித் தனக்காக்கிக்கொள்ளுமவன் என்கை. விண்ணோர் தங்கள் அறவாளன் = நித்யஸூரிகளால் கொண்டாடப்படுகிற திருக்குணங்களையுடையவன் என்று கருத்து.

பரபுருஷன் – அசல்புருஷன் என்றும் புருஷோத்தமன் என்றும் விலக்ஷரிதம்.

 

English Translation

“She has no filial bonds”, thus and thus everyone keeps blaming her, Constantly all the time, she calls out “Madaval”, “Wonder Lord!, “Boar!”, “Birthless Lord!”, “Thousand-named! “Sri Devi’s, Bhu Devi’s, Lord of the skies!” “O Ladies, -how can I accept what he did to my daughter frail!

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top