(1423)
மன்னு நான்மறை மாமுனி பெற்ற மைந்த னைமதி யாதவெங் கூற்றந்
தன்னை யஞ்சிநின் சரணெனச் சரணாய்த் தகவில் காலனை யுகமுனிந் தொழியா
பின்னை யென்றும்நின் திருவடி பிரியா வண்ண மெண்ணிய பேரருள், எனக்கும்
அன்ன தாகுமென் றடியிணை யடைந்தேன் அணிபொ ழில்திரு வரங்கத்தம் மானே,
பதவுரை
|
அணி பொழில் திரு அரங்கத்து அம்மானே!–; |
||
|
மன்னு |
– |
நிலைபெற்ற |
|
நால் மறை மா முனி பெற்ற மைந்தனை |
– |
நான்கு வேதங்களையும் ஓதியுணர்ந்த சிறந்த ம்ருகண்டு முனிவன் பெற்றகுமாரனாகிய மார்க்கண்டேயனை, |
|
மதியாத வெம் கூற்றம் தன்னை அஞ்சி நின் சரண் என |
– |
ஒருவரையும் லக்ஷரியஞ் செய்யாத கொடிய யமனுக்குப் பயந்து ‘உனது அடைக்கலப் பொருளாவேன் யான்’ என்று சொல்லி அவன் உன்னைச் சரணமடைந்தபோது |
|
சரண் ஆய் |
– |
(அவனுக்கு நீ) ரக்ஷகனாகி |
|
தகவு இல் காலனை உக முனிந்து |
– |
இரக்கமில்லாத யமனை வலியொழியும்படி கோபித்து |
|
ஒழியா |
– |
அவ்வளவோடு விட்டிடாமல் |
|
பின்னை |
– |
அதற்குமேலே |
|
என்றும் நின்திரு அடி பிரியா வண்ணம் எண்ணிய |
– |
எந்நாளும் (அம்முனிகுமாரனை) உன்திருவடிகளை விட்டுப் பிரியாமலிருக்கும்படி திருவுள்ளம் பற்றிய |
|
பேர் அருள் – |
– |
(உனது) சிறந்த திருவருளானது |
|
எனக்கும் அன்னது ஆகும் |
– |
என் விஷயத்திலும் அப்படி உண்டாகவேணும் |
|
என்று |
– |
என்று நினைத்து |
|
அடி இணை அடைந்தேன்–. |
||
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- மார்க்கண்டேயனுக்கு எம்பெருமான் திருவருள் புரிந்ததை முன்னிட்டுக்கொண்டு சரணம்புகுகிறாரிதில். மார்க்கண்டேயனுக்கு யமபயத்தை யொழித்து எப்பொழுதும் உன் திருவடிகளைப் பிரியாதபடியான பேற்றைத் தந்தருளியதுபோல, அடியேனுக்கும் பிறவித் துன்பங்கட்குப் பயப்படுதலை யொழித்து எந்நாளும் உன் திருவடிகளைப் பிரியாதபடியான பேற்றைத் தந்தருளவேணுமென்று பிரார்த்திக்கிறார்.
English Translation
O, The Lord to whom all offer worship, you did grace to one Govinda Swami, “Peacock-like the sweet dames offer pleasure, you have no knowledge of this life-aspect. Go now to the world, once again live there, then return to me offer you re satisfied”. Ocean-hued Lord, I’ve come to your lotus feet, O Lord Surrounded by groves in Arangam!
