(1349)
கள்ளக் குறளாய் மாவலியை வஞ்சித்து உலகம் கைப்படுத்து,
பொள்ளைக் கரத்த போதகத்தின் துன்பம் தவிர்த்த புனிதனிடம்,
பள்ளச் செறுவில் கயலுகளப் பழனக் கழனி யதனுள்போய்,
புள்ளுப் பிள்ளைக் கிரைதேடும் புள்ளம் பூதங் குடிதானே!
பதவுரை
|
கள்ளம் குறள் ஆய் மாவலியை வஞ்சித்து |
– |
கபடமுள்ள வாமந ரூபியாகி மஹாபலியை ஏமாற்றி |
|
உலகம் கைப்படுத்து |
– |
ஸகலலோகங்களையும் ஸ்வாதீனப்படுத்திக் கொண்டவனும் |
|
பொள்ளை கரத்த போதகத்தின் |
– |
துளைக்கையை யுடைய கஜேந்திரனது |
|
துன்பம் தவிர்த்த |
– |
துயரத்தைப் போக்கியருளின |
|
புனிதன் |
– |
பரம பவித்திரனுமான பெருமான் எழுந்தருளியிருக்கின்ற |
|
இடம் |
– |
இடமாவது;- |
|
பள்ளம் செறுவில் கயல் உகள |
– |
தாழ்ந்திருக்கின்ற கழனிகளில் மீன்களானவை துள்ளித் துள்ளிவிளையாடா நிற்க |
|
புள்ளு |
– |
பக்ஷரிகளானவை |
|
பழனம் கழனி அதனுள் போய் |
– |
நீர் நிலைகளையுடைய கழனிகளினுள்ளே போய் |
|
பிள்ளைக்கு இரை தேடும் |
– |
தம் தம் குட்டிகளுக்கு உணவாகக்கூடிய சிறு மீன்களைத் தேடப்பெற்ற |
|
புள்ளம் பூதங்குடி;–. |
||
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- இத்தலத்தின் வயல்வளங் கூறுவன பின்னடிகள். முற்காலத்தில் ஆலவாயுடையான் என்பானொரு தமிழன் பட்டரிடம் வந்து இப்பாட்டில் ஒருகேள்வி கேட்டான்;- ‘பள்ளச் செறுவில் கயலுகள” என்றபோதே அவ்விடத்து வயல்களில் மீன்கள் அளவற்றுக் கிடக்கின்றமை வெறிவந்து விட்டது; அப்படியிருக்க, ஈற்றடியில் “புள்ளுப் பிள்ளைக்கு இரை தேடும்” என்று எங்ஙனே சொல்லலாம்? மீன் அருமைப்பட்டிருந்தாலன்றோ இரை தேடவேண்டும்; கொள்வார் தேட்டமாம்படி குறையற்றுக் கிடக்கும்போது தேடிப்பிடிப்பதாகச் சொல்லுவது பொருந்தாதன்றோ? என்று கேட்டான்; இதற்குப் பட்டர் அருளிச் செய்ததாவது – பிள்ளாய்! நீ கற்றவனாயினும் சொற்போக்கு அறிந்திலை; “பிள்ளைக்கு இரை தேடும்” என்றுள்ளது காண்; அங்குள்ள மீன்கள் நிலமிதியாலே தூணும் துலாமும்போலே தடித்திருக்கும்; அவை பறவைக் குட்டிகளின் வாய்க்குப் பிடிக்கமாட்டாவாகையால் உரிய சிறிய மீன்கள் தேடிப்பிடிக்க வேண்டு மத்தனை யன்றோ? என்றாராம்.
English Translation
Like a sly trickster He came swooping over Mabali and took the worlds; He went to the wailing elephant and ended his despair, He resides amid water tanks and wetland fields-where birds swoop down upon jumping fish and snatch them, then fly to their wailing chicks to feed them, -in Pullam-Budangudi, yes, always!
