(1302)

(1302)

படவர வுச்சி தன்மேல் பாய்ந்து பன்னடங்கள் செய்து,

மடவரல் மங்கை தன்னை  மார்வகத் திருத்தி னானே,

தடவரை தங்கு மாடத் தகுபுகழ் நாங்கை மேய,

கடவுளே காவ ளந்தண் பாடியாய் களைக ணீயே.

 

பதவுரை

படம் அரசு உச்சி தன் மேல் பாய்ந்து

(விரிக்கப்பட்ட) படங்களை யுடையனான காளிய நாகத்தினுடைய முடிமீது குதித்து

பல் நடங்கள் செய்து

அனேக விதங்களான நர்த்தனங்களைச் செய்தவனாயும்

மடவரல் மங்கை தன்னை

மடமைக் குணம் வாய்ந்த பெரியபிராட்டியாரை

மார்வகத்து

திருமார்பிலே

இருத்தினானே

நித்யமாக வைத்துக்கொண்டவனாயுமிருக்கிற பெருமானே!,

துடவரை மாடம் தங்கு தகு புகழ் நாங்கை மேய

பெரிய மலைகள் போன்ற மாளிகைகள் பொருந்தியதும் தகுதியான புகழையுடையதுமான திருநாங்கூரில் மேவியிருக்கின்ற

காவளந்தண்பாடியாய்!;

கடவுளே ஸர்வாதிகனே!

நீயே களைகண்

 

English Translation

O, Krishna! You danced on the hoods of Kaliya, then took the coy lotus dame into your embrace.  You reside amid mountain-like mansions of lasting fame in Nanguru’s kavalampadi. You are my sole refuge!

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top