(1301)

(1301)

முனைமகத் தரக்கன் மாள முடிகள்பத் தறுத்து வீழ்த்து,ஆங்

கனையவற் கிளைய வற்கே அரசளித் தருளி னானே,

சுனைகளில் கயல்கள் பாயச் சுரும்புதேன் நுகரும் நாங்கைக்,

கனைகழல் காவ ளந்தண் பாடியாய் களைக ணீயே.

 

பதவுரை

முனை முகத்து அரக்கண் மாள

யுத்தகளத்திலே இராவணன் முடியும்படியாக

பத்து முடிகள் அறுத்து வீழ்த்து

(அவனது) பத்துத் தலைகளையும் அறுத்துத் தள்ளி

ஆங்கு

அந்த லங்கையிலே

அனையவற்கு இளையவற்கே

அப்படிப்பட்ட ராவணனுடைய தம்பியான விபீஷணனுக்கு

அரசு அளித்தருளினானே

ராஜ்யத்தைத் தந்தருளினவனே!,

சுனைகளில் கயல்கள் பாய

நீர்நிலைகளில் கயல்மீன்கள் அஞ்சித் துள்ளயோடும்படியாக

சுரும்பு தேன் நுகரும்

வண்டுகளானவை (ஆரவாரத்துடனே) தேனைப் பருகுமிடமான

நாங்கை

திருநாங்கூரில்

கனை கழல்

ஒலிக்கின்ற வீரத்தண்டையை யுடையனாய்க் கொண்டு

காவளந்தண்பாடியாய்!;

நீயே களைகண்

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- (சுனைகளில் இத்யாதி.) வண்டுகள் பூக்களிலே படிந்து மதுபானம் பண்ணும்போது பெரிய கோலாஹலமாயிருக்கும்; அது தண்ணீரிலுள்ள மீன்களின் காதுகளில்படவே அவை தம்மேலே வண்டுகள் விழுகின்றனவாக  நினைத்து அஞ்சிப் பாய்கின்றனவாம்.

 

English Translation

O, Krishna!  You felled the ten crowned heads of the Rakshasa king and gave his kingdom to the younger brother Vibhishana.  You reside in pleasure where fish drink and dance, while bees sing inebriated with nectar, in Nanguru’s kavalampadi. You are my sole refuge!

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top