(1284)

(1284)

பொங்கிலங்கு புரிநூலும் தோலும் தாழப் பொல்லாத குறளுருவாய்ப் பொருந்தா வாணன்

மங்கலம்சேர் மறைவேள்வி யதனுள் புக்கு மண்ணகலம் குறையிரந்த மைந்தன் கண்டீர்,

கொங்கலர்ந்த மலர்க்குழலார் கொங்கை தோய்ந்த குங்குமத்தின் குழம்பளைந்த கோலந் தன்னால்,

செங்கலங்கல் வெண்மணல்மேல் தவழும் நாங்கூர்த் திருதெற்றி யம்பலத்தென் செங்கண் மாலே

 

பதவுரை

கொங்கு அலர்ந்த

பரிமளம் பரவாநின்ற

மலர் குழலார்

பூக்களையணிந்த கூந்தலையுடையரான மாதர்களின்

கொங்கை தோய்ந்த

தனங்களின் மீது படிந்த

குங்குமத்தின் குழம்பு

குங்குமச்சாறு தன்னை

அளைந்த

அளைந்ததனாலுண்டான

கோலம் தன்னால்

அழகினால்

செம்

சிவந்திருக்கிற

கலங்கல்

வெள்ளமானது

வெண் மணல் மேல் தவழும்

வெளுத்த மணற்குன்றுகளின் மேல் பரவப்பெற்ற

நாங்கூர், திருத்தெற்றியம்பலத்து என் செங்கண் மால்;

பொங்கு இலங்கு புரிநூலும் தோலும் தாழ

மிக விளங்குகின்ற யஜ்ஞோப வீதமும் கிருஷ்ணாஜிநமும் தொங்கப்பெற்ற

பொல்லாத குறள் உரு ஆய்

அழகிய வாமநமூர்த்தியாகி

பொருந்தா வாணன்

ஆஸுரப்ரக்ருதியான மஹாபலியினுடைய

மங்கலம் சேர் மறை வேள்வி அதனுள் புக்கு

மங்களம் பொருந்திய வேத கோஷத்தையுடைய யாக பூமியிலே எழுந்தருளி

குறைமண்அகலம் இரந்த மைந்தன் கண்டீர்

தனக்கு வேண்டியதான பூமியையாசித்த சிறுககன் காண்மின்

கேளா

கேட்டு என்றபடி

 

English Translation

With his bright Vedic thread and deerskin hanging over his shoulder, He came as a beautiful manikin to the great auspicious Vedic sacrifice and took the Earth as a gift from Mabali, see, he is my prince senkanmai, who resides at Nangur, -where fragrant flower-tressed maidens breast-kumkuma-red is carried by waves and deposited kon golden sand dunes, -In his temple of Tirutetri Ambalam.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top