(1282)
கலையிலங்கு மகலல்குல் கமலப் பாவை கதிர்முத்த வெண்ணகையாள் கருங்க ணாய்ச்சி,
முலையிலங்கு மொளிமணிப்பூண் வடமும் தேய்ப்ப மூவாத வரைநெடுந்தோள் மூர்த்தி கண்டீர்,
மலையிலங்கு நிரைச்சந்தி மாட வீதி ஆடவரை மடமொழியார் முகத்து இரண்டு
சிலைவிலங்கி மனஞ்சிறைகொண் டிருக்கும் நாங்கூர்த் திருத்தெற்றி யம்பலத்தென் செங்கண் மாலே.
பதவுரை
|
முலை இலங்குநிரை சந்தி மாடம் வீதி |
– |
மலைபோல் விளங்குகின்ற வரிசைவரிசையாக ஒன்றோடொன்று சேர்ந்திருக்கிற மாடங்களையுடைய தெருக்களிலே |
|
மடம் மொழியார் |
– |
இனிய பேச்சையுடைய பெண்களின் |
|
முகத்து |
– |
முகத்திலுள்ள |
|
இரண்டு சிலை |
– |
இரண்டு விற்கள் போன்ற புருவங்களானவை |
|
விலங்கி |
– |
வளைந்து |
|
ஆடவரை மனம் சிறைகொண்டு இருக்கும் |
– |
ஆண்பிள்ளைகளின் மனத்தை ஸ்வாதீனப்படுத்திக் கொண்டிருக்கப்பெற்ற |
|
நாங்கூர், திருத்தெற்றியம்பலத்துஎன் செங்கண் மால்; |
||
|
கலை இலங்கும் |
– |
மேகலை விளங்கப்பெற்ற |
|
அகல் அல்குல் |
– |
அகன்ற நிதம்பத்தையுடையளாய் |
|
கதிர்முத்தவெள் நகையாள் |
– |
ஒளிபொருந்திய முத்துப் போலே வெளுத்த பற்களையுடையளான |
|
கமலம் பாவை |
– |
பெரியபிராட்டியினுடையவும் |
|
கரு கண் ஆய்ச்சி |
– |
கறுத்த கண்களையுடையளான நப்பின்னைப் பிராட்டியினுடையவும் |
|
முலை இலங்கும் ஒளி மணி பூண்வடமும் தேய்ப்ப |
– |
தனங்களிலே விளங்குகின்ற அழகிய மணிகளிழைத்துச் செய்யப்பட்ட கண்டிகையும் ஹாரமும் உராய, (அதனால்) |
|
மூவாத |
– |
நித்யயௌவனம் மாறாத |
|
வுரை நெடுதோள் |
– |
மலைபோன்று நெடிய திருத் தோள்களையுடைய |
|
மூர்த்தி கண்டீர் |
– |
ஸ்வாமி காண்மின். |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- ஆண்களை எளிதில் வசப்படுத்தும் வல்லமைவாய்ந்த பெண்கள் மலிந்திருப்பதை வருணிப்பதும் நகர்ச்சிறப்பை வருனித்தலாதலால் அதனை வருணிக்கிறார் பின்னடிகளில். திருநாங்கூரில் வீதிகள்தோறும் மலைமலையான மாடங்கள் வரிசை வரிசையாக இடைவிடாது ஒன்றோடொன்று சேர்ந்திருக்கின்றன; அப்படிப்பட்ட வீதிகளில், மதுரமான பேச்சையுடைய பெண்கள் தங்களுடைய புருவநெறிப்பினால் ஆண்பிள்ளைகளின் மனத்தைக் கவர்ந்துகொள்ளுகின்றனராம்; இப்படிப்பட்ட அழகிற்சிறந்த மாதர் வாழப்பெற்ற திருநாங்கூரிலுள்ளது திருத்தெற்றியம்பலம்.
குலையிலங்கும் – ‘மேகலை’ என்ற சொல் முதற்குறையாகிக் கலை என்று கிடக்கிறது என்று கொள்ளலாம். குலை – வஸ்த்ரமுமாம். “முலையிலங்கு மொளிமணிப்பூண் வடமும் தேய்ப்ப” என்பதனால் அப்பிராட்டிமாருடைய கலவி சொல்லப்பட்டதென்க.
முகத்து இரண்டு சிலை – விற்போன்ற புருவங்கள் என்னவேண்டுமிடத்து, வில் என்றே கூறினது ரூபகாதிசயோக்தியாம்.
English Translation
See, the Lord with long mountain-like arms who rubs against the breast-ornaments and pearl necklaces of slim-waisted lotus-dame lakshmi and pearly-smile dark-eyed cowherd-dame Nappinnai without tiring, is our senkanmai who resides at Nangur, -where mountain-like mansions stand in rows on either side of the streets, where the hearts of men-talk get entangled between the twin bow-like eyebrows of sweet tongued dames, -in his temple of Tirutetri Ambalam.
