(1280)
படலடைந்த சிறுகுரம்பை நுழைந்து புக்குப் பசுவெண்ணெய் பதமாரப் பண்ணை முற்றும்,
அடலடர்த்த வேற்கண்ணார் தோக்கை பற்றி அலந்தலைமை செய்துழலு மையன் கண்டீர்,
மடலெடுத்த நெடுன்தெங்கின் பழங்கல் வீழ மாங்கனிகள் திரட்டுருட்டா வருநீர்ப் பொன்னி,
திடலெடுத்து மலர்சுமந்தங் கிழியு நாங்கூர்த் திருத்தெற்றி யம்பலத்தென் செங்கண் மாலே
பதவுரை
|
மடல் எடுத்த நெடு தெங்கின |
– |
பாளைகள் மிகவும் நிறைந்து உயர்ந்துள்ள தென்னை மரங்களினின்று, |
|
பழங்கள் |
– |
காய்கள் |
|
வீழ |
– |
(மாமங்களின் மீது) விழ அதனால் உதிர்ந்த |
|
மாங்கனிகள் திரட்டு |
– |
மாம்பழத் திரள்களை |
|
உருட்டா மலர் சுமந்துவரும் நீர் பொன்னி |
– |
உருட்டிக்கொண்டும் (பல வகைப்) பூக்களையடித்துக் கொண்டும் பெருகுகின்ற பிரவாஹத்தையுடைய காவேரியானது |
|
திடல் எடுத்து |
– |
மேட்டு நிலங்களை யெடுத்துவிட்டு |
|
இழியும் |
– |
வெள்ளமிடப்பெற்ற |
|
நாங்கூர், திருத்தெற்றியம்பலத்து என் செங்கண் மால்; |
||
|
பசு வெண்ணெய் பதம் ஆர |
– |
அப்போது கடைந்து வைத்த வெண்ணெயை அமுது செய்வதற்காக |
|
படல் அடைத்த சிறு குரம்பை நுழைந்துபுக்கு |
– |
படலிட்டு மூடிவைத்த சிறு குடில்களிலே நுழைந்து உள்ளேபோய் |
|
அடல் அடர்த்த வேல்கண்ணார் |
– |
போர்செய்வதற்குரிய வேற்படைபோன்ற கண்களையுடையரான இடைச்சிகளினுடைய |
|
தோக்கை |
– |
சேலைத் தலைப்பை |
|
பற்றி |
– |
பிடித்திழுத்து |
|
அலந்தலைமை செய்து |
– |
துன்பமான சேஷ்டைகளைப் பண்ணி |
|
பண்ணை முற்றும் உழலும் |
– |
இடைச்சேரி யெங்குந் திரிகின்ற |
|
ஐயன் கண்டீர் |
– |
மஹாநுபாவன் காண்மின் |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- குரம்பை – குடிசை, பசுவெண்ணெய் – பசுமைமாறாத வெண்ணெய்; அப்போது தான் கடைந்து திரட்டினவெண்ணெய். புதமார – ‘பதம’; என்னுஞ்சொல்லுக்கு உள்ள பலபொருள்களில் உண்பதும் ஒரு பொருள். தோக்கை – முன்தானை. ‘அலந்தலை’ என்னுஞ் சொல்லின் மேல் பண்புப் பெயர்விகுதி ஏறிக்கிடக்கிறது; துன்பம் என்பதுபொருள். வியாமோஹம் என்ற பொருளுமுண்டு.
(மடலெடுத்த இத்யாதி.) திருநாங்கூரெங்கும் தென்னைமரங்களும் மாமரங்களும் மலிந்து கிடக்கின்றன; ஓங்கியிருக்கின்ற தெங்குகளினின்று தேங்காய்கள் மாமரங்களின் மீது விழவே, அந்த அதிர்ச்சியினால் மாம்பாங்கள் உதிர்ந்து வீழ்கின்றன; அவற்றையெல்லாம் திரட்டியுருட்டிக் கொண்டும் மற்றும் பலவகையான புஷ்பங்களை யடித்துக்கொண்டும் பெருவெள்ளமாகப் பிரவஹிக்கின்ற காவிரியாற்றுக்கால்களையுடையது திருநாங்கூர்.
திடலெடுத்து – திடல்-திடர்; எழுத்துப்போலி. திடராவது மேட்டுநிலம்; பெருவெள்ளம் பெருகும்போது மேடுகளெல்லாம் கரைந்து ஸமநிலமாதல் இயல்பு
English Translation
See, the Lord who entered the huts of cowherd-dames, and ate the butter all over the tenements, and wen about playing mischief, pulling the Saree-ends of Vel-eyed dames is or senkanmai who resides at Nangur, -where fronds of tall coconut trees burst, dropping ripe coconuts that the river Ponni gathers in its waves and flows into lakes with lotus thickets, -In his temple of Tirutetri Amabalm.
