(1256)
கும்பமிகு மதயானை பாகனொடும் குலைந்துவீழ
கொம்பதனைப் பறித்தெறிந்த கூத்தனமர்ந் துறையுமிடம்,
வம்பவிழும் செண்பகத்தின் மணங்கமழும் நாங்கைதன்னுள்,
செம்பொன்மதிள் பொழில்புடைசூழ் திருத்தேவ னார்தொகையே.
பதவுரை
|
மிக கும்பம் மதம் யானை |
– |
பெருத்த மத்தகத்தையுடைய (குவலயா பீடமென்கிற) மதயானையானது |
|
பாகனொடும் குலைந்து வீழ |
– |
தனது பாகனோடுகூட பங்கப்பட்டு பழியும்படியாக |
|
அதன் கொம்பை |
– |
அவ்யானையின் தந்தத்தை |
|
பறித்து எறிந்த |
– |
பிடுங்கிப் பொகட்ட |
|
கூத்தன் |
– |
திவ்ய சேஷ்டிதங்களையுடைய பெருமான் |
|
அமர்ந்து உறையும் இடம்; |
||
|
வம்பு அவிழும் செண்பகத்தின் மணம் கமழும் |
– |
அப்போதலர்ந்த செண்பகப் பூவிமுடைய வாஸனை வீசப்பெற்ற |
|
நாங்கை தன்னுள்; |
||
|
செம்பொன் மதிள் பொழில் புடை சூழ் |
– |
செவ்விய பொன்னால் செய்யப்பட்ட திருமதில்களும் சோலைகளும் சுற்றிலும் சூழ்ந்திருக்கப் பெற்ற |
|
திருத்தேவனார் தொகையே. |
||
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- வம்பு -புதுமை ; வம்பவிழும் – புதுமையாக மலர்ந்த; அப்போதலர்ந்த என்கை.
English Translation
The pot-dancer Lord who broke the tusk of the rutted elephant and killed the mahout together with it, resides permanently at Nangur amid groves I of freshly blossoming Senbakam, surrounded by golden walls and orchards in Tiruttevanar Togai.
