(1255)

(1255)

வாராரு மிளங்கொங்கை மைதிலியை மணம்புணர்வான்,

காரார்திண் சிலையிறுத்த தனிக்காளை கருதுமிடம்

ஏராரும் பெருஞ்செல்வத் தெழில்மறையோர் நாங்கைதன்னுள்,

சீராரும் மலர்பொழில்சூழ் திருத்தேவ னார்தொகையே.

 

பதவுரை

வார் ஆரும் இளகொங்கை மைதிலியை

கச்சையிட்டுத் தாங்க வேண்டும்படியான இளமுலைகளையுடைய ஸீதாபிராட்டியை

மணம் புணர்வான்

விவாஹம் செய்து கொள்வதற்காக

கார் ஆர் தின் சிலை இறுத்த

வயிரம்பற்றித் திண்ணிதான வில்லை முறித்த

தனி காளை

விலக்ஷண யௌவநபுருஷன்

கருதும் இடம்

திருவள்ளம்பற்றின திவ்யதேசம் (எதுவென்றால்)

ஏர் ஆரும் பெரு செல்வத்து எழில் மறையோர்

அழகு பொருந்திய மிக்க ஐச்வரியத்தை யுடையராய் விலக்ஷண வைதிகர்களான அந்தணர் வாழ்கிற

நாங்கை தன்னுள்–;

சீர் ஆரும் மலர் பொழில் சூழ்

அழகு விஞ்சிய பூக்களையுடைய சோலைகளாலே சூழப்பட்ட

திருத்தேவனார் தொகையே–.

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- “வாராளு மிளங்கொங்கை” என்றும் பாடமுண்டு. கச்சு அணிந்து ஆளவேண்டும் படியான இளமுலைகளையுடையாள் என்கை.

 

English Translation

The Lord who broke the great, heavy bow and married the tender corseted dame Maithili resides permanently at Nangur with bright Vedic seers abounding in knowledge-wealth amid the beautiful groves of Tiruttevanar Togai.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top