(1197)

(1197)

புல்லி வண்டறையும் பொழில் புடைசூழ் தென்னாலி யொருந்த மாயனை,

கல்லின் மன்னு திண்டோள் கலிய னொலிசெய்த,

நல்ல இன்னிசை மாலை நாலுமோ ரைந்துமொன் றும்நவின்று, தாமுடன்

வல்ல ராயுரைப் பார்க்கிட மாகும் வானுலகே.

 

பதவுரை

வண்டு புல்லி அறையும் பொழில் சூழ்

வண்டுகளானவை ஒன்றோடொன்று அணைந்து இசைலே சுற்றிலுஞ் சூழப்பட்ட

தென் ஆலி இருந்த மாயனே

திருவாலியிலே எழுந்தருளியிருக்கின்ற எம்பெருமான் விஷயமாக,

கல்லின் திண் மன்னு தோள்

மலைபோலே திடமாயும் நித்யனாயு மிருக்கிற தோள்களையுடைய

கலியன் ஒலி செய்த

திருமங்கை யாழ்வார்அருளிச்செய்த

நல்ல இன் இசை மாலே நாலும் ஓரைந்தும் ஒன்றும்

அழகிய இனிய இசையை யுடைத்தான சொல்மாலையாகிய இப்பத்துப் பாசுரங்களையும்

நவின்று

அபயளித்து

தாம் உடன் வல்லராய் உரைப்பார்க்கு

அர்த்தாநுஸந்தாகம் பண்ணிக் கொண்டுரைக்கு மவர்கட்கு

வான் உலகு இடம் ஆகும்

பரமபதம் இருப்பிடமாகும்.

 

English Translation

This garland of sweet Tamil songs by strong armed Kaliyan sing of the Wonder-Lord residing in Southern Tiruvali surrounded by bee-humming fragrant groves. Those who master it will live in the world of the celestials.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top