(1196)

(1196)

ஓதி யாயிர நாமமும் பணிந்தேத்தி நின்னடைந் தேற்கு,ஒரு பொருள்

வேதியர்! அரையா உரையாய் ஒருமாற்றமெந்தாய்!

நீதி யாகிய வேதமா முனியாளர் தோற்ற முரைத்து, மற்றவர்க்

காதியாய் இருந்தாய்! அணியாலி யம்மானே.

 

பதவுரை

நீதி ஆகிய வேதம்

(காட்டார் அநுஷ்டிக்க வேண்டு மவற்றை) விதிக்குமவையான வேதங்களையும்

மாமுனியாளர் தோற்றம்

(அந்த வேதங்களிலுள்ள மந்திரங்களை தர்சநம் பண்ணினவர்களான) மஹர்ஷிகளின் வரலாற்றையும்

உரைத்து

வெளியிட்டவனாயும்

மற்றவர்க்கு ஆதி ஆய் இருந்தாய்

மற்றுமுள்ள எல்லார்க்கும் காரணபூதனாயு மிருக்குமவனே!

வேதியா

வேதமொன்றினாலேயே அறியத்தக்கவனே!

அரையா

தேவாதி தேவனே!

எந்தாய்

எமக்கு ஸ்வாமியானவனே!

அணி ஆலி அம்மானே!–;

ஆயிரம் நாமமும் ஓதி

(உனது) ஸஹஸ்ர நாமங்களேயுஞ் சொல்லி;

பணிந்து ஏத்தி

வணங்கித் துதித்து

நின் அடைந்தேற்கு

உன்னைத் தஞ்சமாகப்பற்றி புள்ள எனக்கு

ஒரு பொருள் ஒரு மாற்றம் உரையாய்

ஒரு அர்த்தத்தையாவது ஒரு சொல்லையாவது அருளிச் செய்யவேணும்.

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- கீழ்ப் பாசுரங்களிலே “புகுந்தாயைப் போகலொட்டேன்” என்று இவர்தாம் சொல்லிவைத்தாலும், “உன் மனத்தா ன்னினைந்திருந்தாய்?” என்றும் “இனியென் திருக்குறிப்பே?” என்றும் அவன் திருவுள்ளத்தை யநுஸரித்து நிற்கவேண்டிய ஸவபவுண்மையை உணர்ந்தவாரன ஆழ்வார், ஸ்வரூபத்துக்குத் தகுதியாகவன்றே பேசவேணும்; அப்படியே பேசுகிறா ரிப்பாட்டில்; பல் பன்னிரண்டையுங் காட்டிப் பிரார்த்திக்கின்றார்;  அடியேன் தேறியிருக்கும்படி உன் சோதிவாய் திறந்து ஒரு நல்வார்த்தை சொல்லவேணும்; கடற்கரையிலே நின்று “ந த்யஜேயம் கதஞ்சந” என்ற வார்த்தைலயயாவது தேர்த்தட்டிலே நின்று “மா சுச:” என்ற வார்த்தையையாவது அடியேனே நோக்கி யருளிச் செய்ய வேணுமென்கறார். நீ ஸ்வைதந்த்ரனாகையால் இன்று அநுக்ரரஹித்து வந்துசேர்ந்தது போலே நாளே நிக்ரஹித்து அகன்றுபோய் விடவுங்கூடும்; இங்ஙனே நான் சங்கித்துக் கலங்கியிருக்க வொண்ணாத என்னைத் தேற்றுவிக்கவேணு மென்கிறார்.

“ஒரு பொருள் உரையாய்” ஒரு மாற்ற முரையாய்” என்று இரண்டு வாக்கியமாக அந்வயித்துக்  கொள்ளலாம்; ‘என்னைப் பெறுகைக்கு இத்திருவடிகளே ஸாதந்தம்’ என்கிற ஒரு பொருளையும், “மாசுச=துக்கப்பட்டாதே” என்ற ஒரு சொல்லையும் சொல்ல வேணுமென்சை.

நீதியாகிய வேதம்  = •••••••••••••••••••••••••••••••••••••••••  “மெய்யே சொல்லு, தருமத்தை நடத்து” இத்யாதிவாக்யங்களால் நீதியை யுணர்த்துகின்ற வேதம் என்றபடி.

 

English Translation

O, Lord of beautiful Tiruvali, revealing to Vedic seers the source of all thoughts and residing in the hearts of others as the first-cause! O Vedic Lord, mischief Lord, my Lord! My heart worships you with the chant of your thousand names, and surrenders to you. Pray reveal yourself through words and their meaning.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top