(1194)

(1194)

உலவுதிரைக் கடற்பள்ளி கொண்டு வந்து உன் அடியேன் மனம்புகுந்த,அப்

புலவ! புண்ணியனே! புகுந்தாயைப் போகலொட்டேன்,

நிலவு மலர்ப்புன்னை நாழல் நீழல் தண்டாமரை மலரின் மிசை,மலி

அலவன் கண்படுக்கும் அணியாலி யம்மானே.

 

பதவுரை

நிலவு மலர்புன்னை நாழல் நீழல்

எப்போதுமுள்ள புஷ்பங்களை யுடைய புன்னை மரங்களென்ன ஞாழல் மரங்களென்ன (இவற்றினுடைய நிழலில்)

தண்தாமரை மலரின் மிசை

குளிர்ந்த தாமரைப் பூவின் மேலே

மலி அலவன்கண் படுக்கும்

பெரிய ஆண் நண்டுகள் பள்ளி கொண்டிருக்கப் பெற்ற

திரை உலவு கடல்

திரைக் கிளப்பத்தையுடைய திருப்பாற்கடலில்

பள்ளிகொண்டு

சயனித்திருந்து

(ஸமயம் பார்த்திருந்து)

வந்து உன் அடியேன் மனம் புகுந்த அப்புலவ

அங்கு நின்றும் ஒடிவந்து உனது தாஸனான என்னுடைய மனத்திலே புகுந்த அப்படிப்பட்ட ஸர்வஜ்ஞனே!

புண்ணியனே

எனது பாக்கியம் வடிவெடுத்துள்ளவனே!

புகுந்தாயை போகல் ஒட்டேன்

என்னிடம் வந்து சேர்ந்தவுன்னை இனி வேறிடம் போகவொட்டேன்

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- எம்பெருமான் திருப்பாற்கடல் முதலியவிடங்களில் வாழ்வதானது அவ்விடமே உத்தேச்யமென்கிற எண்ணத்தினாலன்று; எந்த ஸமயத்திலே எந்த அன்பருடைய உள்ளத்திலே புகுந்து கொள்ளலாமென்று பார்த்துக்கொண்டு உபாயாநுஷ்டாநம் பண்ணுமவன்போல அங்கே கிடக்கிறானென்பர்; இவ்வர்த்தம் ஸ்ரீவசந பூஷணத்தில்-“ ‘திருமாலிருஞ் சோலைமலையே’ என்கிறபடியே உகந்தருளின நிலங்களெல்லாவற்றிலும் பண்ணும் விருப்பத்தை இவனுடைய சரீர ஏகதேசத்திலே பண்ணும்; அங்குத்

தைவாஸம் ஸதாநம், இங்குத்தைவாஸம் ஸாத்யம். ‘கல்லுங்தனை கடலும்’ என்கிறபடியே இது ஸித்தித்தால் அவற்றில் ஆதரம் மட்டமாயிருக்கும். ‘இளங்கோயில் கைவிடேல்’ என்று இவன் ப்ரார்த்திக்க வேண்டும்படி யாயிருக்கும்.” 170-3 என்ற ஸ்ரீஸூக்திகளால் நன்கு விசதமாகும். இதுவே இப்பாட்டின் முதலடியிலுறையும் பொருளாம். உலவு திரைக்கடலில் பள்ளிகொண்டிருந்தது அடியேன் மனத்தில் புகுருகைக்காக வென்கிறார். இப்படி நெடுநாள் பாரித்து ஸமயம் பார்த்து என் மனத்திலே புகுந்து உன்னை  இனி நான் போகவொட்டேனென்கிறார். “(அப்புலவர் 😉 விசேஷஜ்ஞனல்லையோ? அவஸரமறியாயோ புகுருகைக்காக” என்ற பெரியவாச்சான்பிள்ளை வியாக்கியான  ஸ்ரீஸூக்தி காண்க. ‘புண்ணியனே!’ என்றது-உன்னைப் பெறுவதற்கு உறுப்பாக என்பக்கலிலே யாதொரு ஸூக்ருகமுங் கண்டத்திலே; நீயே யன்றோ மூலஸூக்ருதம் என்றபடி.

பின்னடிகளின் வியாக்கியானத்திலே-“ வயலாலி மணவாளனுடைய வ்யாபாரத்தோடு “வாசியற்றிருக்கிறதாயிற்று இவர்க்கு, அந்நிலத்திலுள்ளவை யாகையாலே” என்றுள்ள ஸ்ரீஸூக்தி அங்குள்ள திர்யக்குக்களுடைய வ்யாபாரந்தோடு அநுஸந்திக்கத்தக்கது. அலவன் -ஆண் நண்டு.

 

English Translation

O, Lord of beautiful Tiruvali, amid lakes where male crabs rest on lotuses under the shade of ever-blossoming Punnai and Nalai trees! You left your serpent bed in the ocean to come and reside in this lowly heart. O, My sacred poet, I shall never let you go.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top