(1193)

(1193)

கந்த மாமல ரெட்டுமிட்டு நின்காமர்சேவடி கைதொழுதெழும்,

புந்தியேன் மனத்தே புகுந்தாயைப் போகலொட்டேன்,

சந்தி வேள்வி சடங்கு நான்மறை ஓதி யோதுவித் தாதி யாய்வரும்,

அந்த ணாள ரறாவணியாலி யம்மானே.

 

பதவுரை

சந்தி வேள்வி சடங்கு நால் மறை

ஸந்தியாவந்தனம் முதலிய நித்ய கரிமங்களையும் யாகம் முதலிய நைமித்திக கருமங்களையும் காம்ய கருமங்களையும் தெரிவிக்கிற நான்கு வேதங்களையும்

ஆதியாய் ஓதிஓது வித்து வரும் அந்தணாளர் அறா

அநாதிகாலமாகம தாங்கள் ஓதியும் பிறர்க்கு ஓதுவித்தும் வருக்கின்றன பிராம்மணர்கள் விட்டுநீங்காத (நித்யவாஸம் பண்ணுமிடமான)

நின்காமருசே அடி

உனது அழகிய திருவடிகளிலே

கந்தம் மா மலர்எட்டும்

மணம் மிக்க சிறந்த எட்டு வகைப் பூக்களையும் ஸமர்ப்பித்து

கை தொழுது எழும் புந்தியேன் மனத்தே

வணங்கி உஜ்ஜீவிக்கவேணு மென்கிற அத்யவஸாய முடையேனான்  என்னுடைய நெஞ்சிலே

புகுந்தாயை போகல் ஒட்டேன்

வந்து புகுந்து வுன்னை இனி வேறோரிடம் போகவொட்டேன்

அணி ஆலி அம்மானே!-;

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- கீழ்ப்பாட்டில் “என் மனம் வாட நீ நினையேல்” என்று மறைபொருளாகச் சொன்னதின் கருத்து வெளிப்படுமாறு இப்பாசுர மருளிச்செய்கிறார். என்ற வடசொல் ‘கந்தம்’ என்று கிடக்கிறது; மணம் மிக்க மாமலரெட்டும் எவையென்னில்; கருமுகை, கற்பகம், நாழல், மந்தாரம், ஸௌகந்தி, செங்கழுநீர், தாமரை, தாழை என்பனவாம். இவற்றைச் சொன்னது மற்றும் தேவார்ஹமாயுள்ள புன்னை முதலிய புஷ்பங்களுக்கும் உபலக்ஷணமாம்.

“மாமல ரெட்டு மிட்டு” என்றவிதற்கு-ஒவ்வொரு அக்ஷரமும் நறுமலர்பேர்போலே அவனுக்கு போக்யமாம்படியிருக்கைவாலே எட்டு மலர்கள் போன்ற எட்டெழுத்தோடுங்கூடின திருமந்திரத்தை அநுஸந்தித்து என்பதாகவும் பொருள் கூறலாம். அன்றியே; “அஹிம்ஸா ப்ரதமம் புஷ்பமிந்த்ரிய நிக்ரஹ: 1. ஸர்வபூததயா புஷ்பம் க்ஷமா புஷ்பம் விசேஷத:. ஜ்ஞாநம் புஷ்பம் த்யானம் புஷ்பம் ததைவ ச-ஸத்யமஷ்டவிதம் புஷ்பம் விஷ்ணோ: ப்ரிதிகரம்பவேத்.” என்கிறபடியே  அஹிம்ஸை, இந்திரிய நிக்ரஹம், ஸர்வ பிராணிகளிடத்திலும் இரக்கம், பொறுமை, ஞானம், தவம், தியானம், ஸத்யம் என்று எட்டு வகையான புஷ்பங்களாகச் சொல்லப்பட்டவற்றை ஸமர்ப்பித்து என்றுமாம். (இப்பொருள்கள் ஆசார்யஹ்ருதய (99 ஸூ) வியாக்கியானத்திலுள்ளவை.)

காமரு சேவடி = காமம் தரு’ என்பது ‘காமரு’ என மருவிக் கடக்கிறது; ஆசையை விளைவிக்க வல்ல திருவடி என்றபடி; எனவே, அழகிய திருவடி என்கிறதாயிற்று. உனது ஸ்ப்ருஹணீயமான திருவடிகளைக்  கைதொழுது உஜ்ஜீவிக்க வேணுமென்னும் அத்யவஸாய முடையேனான என்னுடைய ஹ்ருதயத்திலே, நானுன்னை விரும்பாதிருக்க நீயாகவே வந்து புகுந்தபின்பு இனிப்போகவொட்டேன்: தானாகவே விரும்பி வந்து சேர்ந்த செல்வத்தைத் தள்ளுவாருண்டோ? என்கிறார்.

அறு தொழிலந்தணர்கள் நிறைந்திருக்குந் திருவாலி யென்கிறது பின்னடிகளில்.

 

English Translation

O, Lord of beautiful Tiruvali, where generations of Vedic seers live, learning and teaching the chants, the sacrifices, and the ritual practices from beginning less yore! My heart worships your adorable lotus feet with fragrant flowers culled from the eight Quarters, you have entered into my lowly heart. Now I shall never let you go.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top