(1191)

(1191)

மின்னில் மன்னு நுடங்கிடை மடவார்தம் சிந்தை மறந்து வந்து,நின்

மன்னு சேவடிக்கே மறவாமை வைத்தாயால்,

புன்னை மன்னு செருந்தி வண்பொழில் வாயகன் பணைகள் கலந்தெங்கும்,

அன்னம் மன்னும் வயலணி ஆலி யம்மானே.

 

பதவுரை

புன்னை செருந்தின்னு வண் பொழில் வாய்

புன்னை மரங்களும் சுரபுன்னை மரங்களும் பொருந்திருயிருக்கிற அழகிய சோலைகளிலே

அகன் பனைகள் எங்கும்

விசாலமான தடாகங்களிலெங்கும்

அன்னம் கலந்து மன்னும்

அன்னப்பற்றவைகள் சேர்ந்து வாழப்பெற்றதாயும்

வயல்

வயல்தளையடைத்தாயுமிருக்கிற

அணி ஆலி அம்மானே

அழகிய திருவாலிநகரிக்கு இறைவனே!;

மின்னின் மன்னுநுடங்கு இடைமடவார்தம் சிந்தை மறந்து வந்து

மின்னல் போன்று துவண்ட இடையையுடைய ஸ்த்ரிகளைப் பற்றின சிந்தனையை தவிர்ந்துவந்து

நின் மன்னு சேவடிக்கே மறவாமை வைத்தாய்

உன் இணைத்திருவடிகளையே நான் நித்தியம் அநுஸந்திக் கும்படி அருள்செய்து வைத்திருக்கிறாய்;

ஆல்

ஆச்சரியம்!.

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- ஆழ்வார்தம்முடைய பழைய நிலைமையையும் இப்போதைய நிலைமையையும் நினைந்து எம்பெருமானிடத்திலே பெருநன்றி பாராட்டுகின்றார். பிரானே! அநாதி காலமாக நான் எப்படி யிருந்தவன்; மாதரிகளின் இடையழகிலே மயங்கிக் கிடந்தவனான்றே; அப்படிப்பட்ட என்னை அவ்விஷயத்தைக் காறியுமிழ்ந்து உன் திருவடிகளையே சிக்கெனப் பிடித்துக்கொண்டு வாழுமாறு பண்ணிவைத்தாயே!, இந்த மஹோபகாரத்தை நான் மறக்கலாகுமோ? என்கிறார். மூன்றாமடியில், பவண-‘பண்ணை’ என்பதன் தொகுத்தல்; குளம்.

 

English Translation

O, Lord of beautiful Tiruvali! Swans fill the lakes in the groves where Punnai and Serundi trees grow in profusion. You weaned me away from thoughts of lightning-thin-waist dames and made me hold on to your lotus feet without ever forgetting, what a wonder!

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top