(1190)

(1190)

நென்னல்போய் வருமென்றென் றெண்ணி யிராமையென் மனத்தே புகுந்தது,

இம்மைக் கென்றிருந்தே நெறிநீர் வளஞ்செறுவில்,

செந்நெற் கூழை வரம்பொரீஇ அரிவார் முகத்தெழு வாளைபோய், கரும்பு

அந்நற் காடணையும் அணியாலி யம்மானே.

 

பதவுரை

எறி நீர்வளம் செறுவில்

அலையெறிகின்ற நீர்வளம் பொருந்திய வயல்களிலே

செந்நெல் கூழை

செந்நெற்பயிர்கள்

வரம்பு ஒரி இ

வரப்புகளின்மேலே சாயவிட்டு

அரிவார்முகத்து

அறுக்கிறவர்களுடைய முகத்திலே

எழு வாளை

(அக்கதிர்களில் நின்றும்) குதித்துப்பாய்ந்த மீன்களானவை (அபாயமுள்ள இவ்விடம் இனி நமக்குத் தகாதென்று அவ்விடம் விட்டுப்) புறப்பட்டுப் போய்

அ நல் கரும்பு காடு அணையும்

அப்படிப்பட்ட நல்ல கருப்பஞ் சோலைகளிலே சேரப்பெற்ற

அணி ஆலி அம்மானே !–

நென்னல் போய் வரும் என்று என்று எண்ணி இராமை

‘நேற்றுப்போனான், இன்று வருவன் இன்று வருவன்’ என்றிப்படி பாரித்துக்கொண்டு போதுபோக்கவேண்டாதபடி

என் மனத்தே புகுந்தது

(ஸ்திரப்ரதிஷ்டையாக நீ) என் நெஞ்சிலே புகுந்தவிது

இம்மைக்கு என்று இருந்தேன்

இந்த ஜன்மம் மழுமைக்குனமாம் என்று துணிந்திருக்கிறேன்.

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- இனி போக்குவரத்து இல்லாமே ஸ்திரப்ரதிஷ்டைம்படி என் மனத்திலே புகுந்தாயென்கறது முதலடி. நென்னல் போய் வருமென்றென்றெண்ணி யிராமை = உலகத்திலே ஒருவர் விட்டுப்பிரிய நேர்வதுண்டே; காதலியை காதலன் விட்டுப்பிரிந்து தேசாந்தரஞ் சென்றால் விரஹவ்யஸநத்தை ஒருவாறு ஆற்றிக்கொள்வதற்காக ‘நேற்றுப் போனார், இன்று வந்திடுவர்’ என்று சொல்லிக் கொண்டே காதலி காலங்கழிப்பது வழக்கம்; அப்படிச்சொல்லிக்கொண்டு ஏங்கிக்கிடக்க வேண்டாதபடி வயலாலிமணவாளன் ஆழ்வார் தம்முடைய திருவுள்ளத்தை ஒரு  நொடிப்பொழுதும் ட்டுபிரியாகிருக்கின்றமையைச் சொன்னபடி. “ நென்னல் போய் வரும்” என்பதற்கு மற்றொரு வகையாகவும் பொருள் சொல்லலாம்; நேற்று ஒரு நாள்  கழிந்தது, இவற்றை நாள் வந்தது; இதுவுங்கழிந்து நாளை நாள் வரக்கடவது, அதுவும் கழிந்து அடுத்த நாள் வரக்கடவது என்றிப்படியே (பரதாழ்வான் போலே) பல்லைக்கடித்துக் கொண்டு பிரிவு நாள்களே எண்ணியிருக்க வேண்டாதபடி-என்றுமாம்.

ஆழ்வார்! இப்போது உம்முடைய நெஞ்சிலே எம்பெருமான் இப்படி வந்து புகுந்தாலும் அடுத்த க்ஷணத்திலே ஓடிப்போய்விட மாட்டானை வென்று பிறர்சங்கிக்க இடமில்லாதபடி “இம்மைக்கென்றிருந்தேன்.” எனகிறார். இந்த ஜன்மம் முழுமைக்கும் இப்படியே நித்ய ஸம்ச்லேஷம் குறையின்றி நிலேநிற்குமென்று நிச்சியித்திருக்கிறேனென்றவேறு, இருந்தேன்=நிகழ் காலத்தை இறந்த காலத்தாற் சொல்லுவது முண்டு.

எறிநீர்வளஞ் செறுவில் என்றுதொடங்கித் திருவாலியின் வயல் நிலைமையை வருணிக்கிறார். கழனிகளில் செந்நெற் பயிர்கள் வானோங்கி வளர்ந்திருந்ததனால் அவற்றை நேரே நின்று அறுக்க முடியமால் கதிர்த்தலைகளை மடக்கி வரப்புகளிலே படியவைத்து அறுக்கின்றார்களாம் பயிர்த்தொழிலாளர்; அப்படி யறுக்கும்போது அக்கதிர்களைச் சேரப்பிடித்த பிடியிலே அகப்பட்டுக்கொண்ட வாளைமீன்கள் அவர்களுடைய  முகத்திலே எழப்பாய்ந்து அபாயமுள்ள அவ்விடத்தைவிட்டுக் கவலையின்றி வாழ்வதற்காக ஸமீபத்திலுள்ள கருப்பங் காட்டிலே சென்று சேர்கின்றனவாம்.

செந்நெல் கூழை -‘கூழை’ என்று ஏகாரவீற்றகான சொல்லாகவே கொள்ளுதலும். ‘கூழ்’ என்ற சொல் இராண்டாம் வேற்றுமையுருபு ஏற்றிருப்பதற்காகக் கொள்ளுதலும் பொருந்தும். கூழை என்று தலை மயிர்க்குப் பேராய் இலக்கணையால் தலையைச் சொல்லிற்றாய் ‘செந்நெல் தலை’ என்றபடி. பிந்தன யோஜனையில், கூழ் என்ற உணவின் பெயர்அதன் காரணமான பயிரைக் குறித்தது; காரிய வாகுபெயர், ஒரிஇ-ஒருக்கி; சொல்லிசையளபெடை.

 

English Translation

O, Lord of beautiful Tiruvali! The Valai fish in paddy fields caught in the compass of the sickle leap out from the waters over the harvesters’ faces and move into the dense sugarcane thickets. Without deceiving me with “Going yesterday and coming tomorrow”, you have come to live forever in my heart.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top