(1178)

(1178)

ஒருகுறளா யிருநிலம்மூ வடிமண் வேண்டி உலகனைத்து மீரடியா லொடுக்கி, ஒன்றும்

தருகவெனா மாவலியைச் சிறையில் வைத்த தாடாளன் தாளணைவீர், தக்க கீர்த்தி

அருமறையின் திரள்நான்கும் வேள்வி யைந்தும் அங்கங்கள் அவையாறு மிசைக ளேழும்,

தெருவில்மலி விழாவளமும் சிறக்கும் காழிச் சீராம விண்ணகரே சேர்மி னீரே.

 

பதவுரை

ஒரு குறள் ஆய் இரு நிலம் மூ அடி மண் வேண்டி

விலக்ஷண வாமநரூபியாகி (மஹாபலியிடஞ் சென்று) விசாலமான இந்த பூமிக்குள்ளே மூவடிநிலத்தை மாத்திரம் யாசித்து

(அப்படியே அவன் தாரைவார்த்து தத்தஞ்செய்தவாறே)

உலகு அனைத்தும்

கீழ்மேலுலகங்களெல்லாவற்றையும் இரண்டடியாலே ஈர்அடியால் ஒடுக்கி ஆக்கிரமித்து,

(மூன்றாமடியை வைக்க இடம் காணாமையாலே)

ஒன்றும் தருக எனா

மற்றோரடி வைப்புக்கு உரிய நிலத்தைக் கொடு என்று சொல்லி

(அதற்கு அவன் தன் தலையைக் காட்டவே அதில் மூன்றாமடியை வைத்து )

மாவலியை சிறையில் வைத்த

அந்த மஹாபலியைப் (பாதாளமாகிற) சிறையிலே கொண்டு  வைத்த

தாடாளன்

பெருமை பொருந்திய ஸர்வேச்வரனுடைய

தாள் அணைவீர்

திருவடிகளைச் சேரவேண்டியிருக்குமவர்களே!

(நீங்கள் செய்யத்தக்கது என்னவென்றால்)

தக்க கீர்த்தி அருமறையின் திரள் நான்கும்

தகுதியான கீர்த்தியையுடைய அரிய வேதங்களின் திரள்கள் நான்கும்

வேள்வி ஐந்தும்

பஞ்சமஹாயஜ்ஞங்களும்

அங்கங்கள் அவை ஆறும்

வியாகரணம் முதலிய ஆறு அங்கங்களும்

இசைகள் ஏழும்

ஸப்த ஸ்வரங்களும்

தெருவில் மலி விழா வளமும்

வீதி நிறைந்த உத்ஸவவைபவங்களும் (ஆகிய இவற்றாலே

சிறக்கும்

சிறப்புப் பெற்ற

காழி

காழியென்னும் க்ஷேத்திரத்திலுள்ள

சீராம விண்ணகரி

சீராம விண்ணகரமென்னும் திருப்பதியை

நீர்சேர்மின்

நீங்கள் சென்று சேருங்கள்

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- இப்பாட்டில் ஒன்று இரண்டு மூன்று நான்கு ஐந்து ஆறு ஏழு என்னும் எண்கள் அழகாக அமைந்திருத்தல் நோக்கத்தக்கது.  இத்திருப்பதியிலெ ழுந்தருளியிருக்கிற பெருமான் (மூல மூர்த்தி) உலகளந்த பெருமாளாதலால் ஒரு குறளா யென்று தொடங்குகிறார்

இரண்டாமடியில் எண்ணா  என்கிற செய்யாவென்னும் வாய்ப்பாட்டிறந்த காலவினையெச்சம் எனா என்று தொக்கியிருக்கிறது என்று சொல்லி என்பது பொருள் – தாடாளன் – பெருமை பொருந்தியவன், முயற்சியுள்ளவன், இத்தலம் தாடாளன் ஸந்நிதி என வழங்கப்படுதலுமுண்டு.

 

English Translation

One day this two-foot tall manikin came and asking for three steps he measured the whole Earth. For the third step He gave Mahabali king rule of the nether world benevolently. With the sound of Vedas-four, Sacrifice-five, six Angas, seven Svaras he resides in streets filled with gaity in festive Kali- Seerama Vinnagar, O people, go to!

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top