(1177)
தேனமர் பூம்பொழில் தில்லைச் சித்திர கூட மமர்ந்த,
வானவர் தங்கள் பிரானை மங்கையர் கோன்மரு வார்,
ஊனமர் வேல்கலி கன்றி யொண்டமி ழொன்பதோ டொன்றும்,
தானிவை கற்றுவல் லார்மேல் சாரா தீவினை தானே.
பதவுரை
|
தேன் அமர் பூ பொழில் தில்லை சித்திரகூடம் அமர்ந்த |
– |
வண்டுகள் மொய்த்து அழகிய சோலைகளையுடைய தில்லைத்திருச் சித்திரகூடத்திலே நித்யவாஸஞ் செய்தருள்கிற |
|
வானவர் தங்கள் பிரானை |
– |
தேவாதிதேவன் விஷயமாக, |
|
மங்கையர்கோன் |
– |
திருமங்கையிலுள்ளார்க்குத் தலைவரும் |
|
மருவார்ஊன் அமர்வேல் |
– |
எதிரிகளின் சரிரத்திலே பொருந்தித் தைக்கும் வேற்படையையுடைய வருமான |
|
கலிகன்றி |
– |
திருமங்கையாழ்வார்(அருளிச் செய்த) |
|
ஒண் தமிழ் இவை ஒன்பதோடு ஒன்றும் |
– |
அழகிய தமிழினாலாகிய இப்பத்துப் பாசுரங்களையும் |
|
கற்று வல்லார்மேல் |
– |
ஓதித் தேறினவர்களிடத்தில் |
|
தீவினை சாரா |
– |
பாவங்கள் கிட்டமாட்டா |
English Translation
The Lord comes surrounded by be humming flower-bowers in Tillai Tiruchitrakudam. Kalikanri the king of the Mangai tract, who wields the sharp enemy-piercing spear, has sung this garland of Tamil songs in his praise. Those who master it will never acquire evil karmas.
