(1173)
எய்யச் சிதைந்த திலங்கை மலங்க வருமழை காப்பான்,
உய்யப் பருவரை தாங்கி ஆநிரை காத்தானென் றேத்தி,
வையத் தெவரும் வணங்க அணங்கெழு மாமலை போலே,
தெய்வப்புள் ளேறி வருவான் சித்திர கூடத்துள் ளானே.
பதவுரை
|
எய்ய இலங்கை சிதைந்தது |
– |
“ஒரு அம்பை தொடுத்து விட்ட மாத்திரத்திலே லங்காபுரியானது அழிந்தொழிந்தது (அதுவுந் தவிர) |
|
ஆநிரை மலங்க வரும் மழை காப்பான் |
– |
பசுக்களின் கூட்டம் துன்பமடையும்படியாக வந்து ஏழுநாள் ஓயாமல் பெய்த மழையை தடுப்பதற்காகவும் |
|
உய்ய |
– |
(ஆநிரைகள்) பிழைப்பதற்காகவும் |
|
பருவரை தாங்கி காத்தான் |
– |
பெரிய கோவர்த்தன மலையைக் (குடையாக) எடுத்துப் பிடித்து எல்லாரையும் காப்பாற்றினான். |
|
என்று வையத்து எவரும் ஏத்தி வணங்க |
– |
என்று சொல்லி பூமியிலுள்ளாரெல்லாரும் துதித்துத் தொழும் படியாக |
|
அணங்கு எழுமா மலைபோலே தெய்வம் புள் ஏறி வருவான் |
– |
தெய்வாவேசங் கொண்ட ஒரு பெரிய மலைபோலே யிருக்கிற திவ்ய பக்ஷியாகியகருடன் மீதேறிக் கொண்டு எழுந்தருளும் பெருமான் |
|
சித்திரகூடத்து உள்ளான்-; |
||
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- மூன்றாமடியில் “வையத்தெவரும்” என்பதே பாடம். அரும்பதவுரைகாரர் “வையத்தேவரும்” என்று பாடங்கொண்டு நிலத்தேவர்களான பிராமணர்களென்று பொருளுரைத்து பெரியவாச்சான் பிள்ளை திருவுள்ளத்திற்குப் பொருந்தாது ஓசையின்பமும் சிதையும்.
அணங்கெழுமாமலைபோலே – அணங்கெழுதலாவது தெய்வாவேசம் பெறுதல். “காய்சினப் பறவையூர்ந்து பொன்மலையின் மீமிசைக் கார்முகில்” போல் 3573. என்றார்போலே பொன் போல் மேனியனான கருடன் மீது கரிய திருமால் வீற்றிருப்பது பொன்மலையினுச்சியில் காளமேகம் படிந்தாற் போன்றிருத்தலால் ” மாமலைபோலே தெய்வப்புள் ” என்றார்.
English Translation
The mountain-like Lord goes about on the Earth riding his Garuda-bird, worshipped by all. He rained arrows on Lanka, he lifted a mountain to stop the rains and protect the cows. He resides in Tillai Tiruchitrakudam.
