(1164)

(1164)

மௌவல் குழலாய்ச்சி மெந்தோள் நயந்து மகரம் சுழலச் சுழல்நீர் பயந்த,

தெய்வத் திருமா மலர்மங்கை தங்கு திருமார் பனைச்சிந்தை யுள்வைத்து மென்பீர்

கௌவைக் களிற்றின் மருப்பும் பொருப்பில் கமழ்சந்து முந்தி நிவாவ லங்கொள்,

தெய்வப் புனல்சூழ்ந் தழகாய தில்லைத் திருச்சித்ர கூடம் சென்றுசேர் மின்களே.

 

பதவுரை

மௌவல் குழல் ஆய்ச்சி மெல் தோள் நயந்து

முல்லைப்பூவைக் கூர்தலிலே அணிந்துள்ள நப்பின்னைப் பிராட்டியினுடைய மெல்லிய தோள்களை விரும்பி யணைந்தவனும்,

மகரம் சுழல சுழல் நீர்பயந்த தெய்வம் திரு மா மலர்மங்கை தங்கு திரு மார்பினை

மீன்கள் சுழலும்படி சுழன்று வருகிற கடலினால் பிரஸவிக்கப்பட்ட அழகிய பெரிய பிராட்டியர்நித்யவாஸம் பண்ணப்பெற்ற திருமார்பை யுடையவனுமான பெருமானை

சிந்தையுள் வைத்தும் என்பீர்

நெஞ்சில் வைக்க வேண்டியிருக்குமன்பர்களே!,

கௌவை களிற்றின் மருப்பும்

(சிங்கத்தோடே பிணங்கிப் பிளிறுகிற யானையின் கொம்புகளையும்

நெருப்பில் கமழ் சந்தும

மலையிலுள்ள மணங்கமழ்கின்ற சந்தன மரங்களையும்

உந்தி

தள்ளிக்கொண்டு

நிவா வலங்கொள் தெய்வம் புனல் சூழ்ந்து அழகயாய

‘நிவா’ என்கிற ஆறானது சுற்றிலும் பிரவஹிக்கப் பெற்றதும் புண்ய தீர்த்தங்களால் சூழப்பட்டு  அழகியதுமான

தில்லை சேர்மின்கள்-.

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- பெரிய பிராட்டியர், பாற்கடல் கடையும்போது அதில் நின்றுந் தோன்றினவளாதலால் “நீர்பயந்த தெய்வத் திருமாமலர்மங்கை” என்றார்.  முகரம் – மீனுக்கும் முதலைக்கும் பெயர். கௌவை எனினும் கவ்வை எனினும் ஒக்கும்; பேரொலி என்று பொருள். (மதநீர்என்பாருஞ் சிலருண்டு.) சந்து-சந்தநமென்ற வடசொற் சிதைவு.  நிலா-வெள்ளாறு; இத்தலத்திற் பெருகுவதொரு நதி.

 

English Translation

The Lord embraced he bamboo-slender arms of the flower-coiffured cowherd dame Nappinnai. The Makara-fish ocean-born lotus-dame Lakshmi resides on his chest. If you wish to keep him in your hearts forever, go now to Tillai Tiruchitrakudam where the Lord resides, surrounded by the gushing waters of the Vellaru River which brings fragrant sandal wood and elephant tusks as offering to the Lord.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top