(1163)

(1163)

நெய்வா யழலம் புதுரந்து முந்நீர் துணியப் பணிகொண் டணியார்ந்து,இலங்கு

மையார் வணிவண் ணனையெண்ணி நுந்தம் மனத்தே யிருத்தும் படிவாழ வல்லீர்,

அவ்வாயிளமங் கையர்ப்பேச வுந்தான் அருமா மறையந் தணர்சிந் தைபுக,

செவ்வாய்க் கிளிநான் மறைபாடு தில்லைத் திருச்சித்ர கூடம் சென்றுசேர் மின்களே.


பதவுரை

நெய் வாய் அழல் அம்பு துரந்து

கூர்மை பொருந்திய வாயையுடைத்தாய் அக்நியைச் சொரிகின்ற அம்பை பிரயோகித்து

முந்நீர்துணிய

ஸமுத்ரத்தை த்வம்ஸம் செய்ய முயன்று (பின்பு ஸமுத்ரராஜன் அநுகூலித்து வந்தவாறே)

பணி கொண்டு

(அவன் மேலே அணை கட்டுகையாகிற) கைங்கரியத்தை அவனால் கொண்டவனாயும்

அணி ஆர்ந்து இலங்கு மை ஆர்மணிவண்ணனை எண்ணி

ஆபரணங்கள் நிறைந்து விளங்குகின்ற கருமணி போன்ற வடிவுடைய னாயு மிருக்கிற பெருமானை சிந்தித்து

நும் தம் மனத்தே இருத்தும்படி வாழ வல்லீர்

உங்களுடைய  நெஞ்சிலே (அவனை) இருத்தி வாழ நினைத்திருக்கு மன்பர்களே!,

அவ்வாய் இள மங்கையர்

அப்படிப்பட்ட வாயையுடைய சிறு பெண்கள்

அரு மா மறை பேசவும்

(காதால் கேட்டுக்கேட்டு முகபாடமான) அரிய பெரிய வேதவாக்கியங்களை சொல்லாநிற்க (அப்பெண்களுடனே கூட)

செம் வாய்கிளி அந்தணர் சிந்தை புக நால் மறைபாடு

சிவந்த வாயையுடைய கிளிகளானவை பிராஹ்மணர்கட்கும் மநோஹரமாக நான்கு வேதங்களையும் பாடுமிடமான

தில்லை சேர்மின்கள்-.

 

English Translation

The Lord shot fiery sharp arrows and forced the sea to make way. To build a bridge across it. He is the dark on with many ornaments. If you wish to make him live in your heart forever, go now to Tillai Tiruchitrakudam where parrots learn to sing the Vedas from young maidens who teach it to them, delighting the hearts of their fathers.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top