(1097)

(1097)

படநாகத் தணைக்கிடந்தன் றவுணர்கோனைப் படவெகுண்டு மருதிடைப்போய்ப் பழனவேலி,

தடமார்ந்த கடல்மல்லைத் தலசயனத்துத் தாமரைக்கண் துயிலமர்ந்த தலைவன்தன்னை,

கடமாரும் கருங்களிறு வல்லான்வெல்போர்க் கலிகன்றி யொலிசெய்த இன்பப்பாடல்,

திடமாக விவையைந்து மைந்தும்வல்லார் தீவினையை முதலரிய வல்லார்தாமெ.

 

பதவுரை

படம் நாகம் அணை கிடந்து

–

படங்களையுடைய சேஷசயனத்திலே பள்ளிகொள்பவனும்

அன்று

–

முன்பொருகால்

அவுணர் கோனை படவெகுண்டு

–

அசுரர் தலைவனான இரணியனை முடியும்படி சீறினவனும்

மருது இடை போய்

–

இரட்டை மருதமரங்களின் நடுவே தவழ்ந்து சென்றவனும்

பழனம் வேலி

–

நீர் நிலங்களைச் சுற்றிலுமுடைத்தாய்

தடம் ஆர்ந்த

–

தடாகங்கள் நிறையப்பெற்றதான

கடல்மல்லை தலசயனத்து

–

திருக்கடல்மல்லையிலே

தாமரை கண்துயில் அமர்ந்த

–

தாமரைபோன்ற திருக்கண்கள் துயில்கொண்டிராநின்ற

தலைவர் தம்மை

–

ஸ்வாமியுமான தலசயனத்துறைவாரைப் பற்றி,

கடம் ஆரும் கருகளிறு வல்லான்

–

மதம்மிக்க பெரிய யானையை நடத்தவல்லவரும்

போர் வெல்

–

யுத்தத்திலே வெற்றி பெறுமவருமான

கலிகன்றி

–

திருமங்கையாழ்வார்

ஒலிசெய்த

–

அருளிச்செய்த

இன்பம்

–

இன்பம் விளைக்கவல்ல

இவை ஐந்து ஐந்து பாடலும்

–

இப்பத்துப் பாசுரங்களையும்

திடம் ஆக

–

உறுதியாக

வல்லார் தாம்

–

ஓதவல்லவர்கள்

தீவினையை

–

பாவங்களை

முதல் அரிய வல்லார்

–

வேரறுக்க வல்லவராவர்கள்.

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

“திடமாக” என்பதனை “ஐந்து மைந்தும் வல்லார்” என்பதிலும் அந்வயிக்கலாம்’ “தீவினையை  முதலரிய வல்லார்” என்பதிலும் அந்வயிக்கலாம்; பிந்தின அந்வயத்தில்; நிச்சயமாகப் பாவத்தைப் போக்கிக்கொள்ளுவர்கள் என்றபடி.

 

English Translation

The Lord reclines on a hooded snake; he showed his wrath on the Asura king Hiranya. He went between the twin Marudu trees. He reclines in Talasayanam at kadal Mallai. The victorious battle-elephant-riding Kalikanri has sung his praise in ten sweet Tamil songs. Those who master it will be able to rid themselves of their Karmas on their own.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top