(1054)
தருக்கி னால்சமண் செய்து சோறுதண் தயிரினால்திரளை,மிடற்றிடை
நெருக்கு வார்அலக் கணது கண்டென் நெஞ்சமென்பாய்,
மருட்கள் வண்டுகள் பாடும் வேங்கடம் கோயில் கொண்டத னோடும், வானிடை
அருக்கன் மேவிநிற் பாற்கடி மைத்தொழில் பூண்டாயே.
பதவுரை
|
தருக்கினால் |
– |
வெறும் தர்க்கங்களாலே |
|
சமண் செய்து |
– |
தங்களுடைய சமண மதத்தைப்பற்றி வாது செய்துகொண்டு |
|
தண் தயிரினால் |
– |
நல்ல தயிரோடு கூடிய |
|
சோறு திரளை |
– |
சோற்றுக் கவளத்தை |
|
மிடறு இடை |
– |
கழுத்துக்குள்ளே யிட்டு |
|
நெருக்குவார் |
– |
அடைப்பவர்களான அந்தச் சமணருடைய |
|
அலக்கண் அது |
– |
அப்படிப்பட்ட திண்டாட்டத்தை |
|
கண்டு |
– |
பார்த்து |
|
என் நெஞ்சம் என்பாய் |
– |
ஓ மனமே! (நீ அவர்களுடைய திரளில் சேராமல்) |
|
வண்டுகள் |
– |
வண்டுகளானவை |
|
மருட்கள் |
– |
மருள் முதலிய இசைகளை |
|
பாடும் |
– |
பாடுமிடமான |
|
வேங்கடம் |
– |
திருமலையை |
|
கோயில் கொண்டு |
– |
திருக்கோயிலாகக் கொண்டு |
|
அதனோடும் |
– |
அவ்வளவுமாத்திரமன்றிக்கே |
|
வானிடை |
– |
ஆகாசத்திலே (திரிகிற) |
|
அருக்கன் |
– |
ஸூர்யமண்டலத்திலும் |
|
மேவி நிற்பாற்கு |
– |
பொருந்தியிருக்கும் பெருமானுக்கு |
|
அடிமைத்தொழில் பூண்டாயே-. |
||
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- தருக்காவது தர்க்கம்; யுக்திவாதம். கேவலம் யுக்திவாதங்களாலே மதஸ்தாபநம் செய்வது கூடாது; சாஸ்த்ரங்களுக்கு இணங்கிய யுக்திவாதங்களே உசிதமானவை; அங்ஙனன்றிக்கே பிரமாணங்களுக்கு விருத்தமான சுஷ்கதர்க்கங்களாலே தங்கள் மதத்தை உரைப்பராம் சமணர்கள்; அதை அருளிச் செய்கிறார் தருக்கினால் சமண் செய்து என்று.
(சோறு இத்யாதி.) சமணமதத்தில் ப்ரஸித்தமாக ஒரு விரதமுண்டு; அதாவது- பெருஞ்சோறுண்ணுதல். தயிறும் சோறுமாகத் திரட்டி, கண் பிதுங்கும்படி மிடற்றிலேயிட்டு நெருக்குவர்களாம் நோன்புக்குறுப்பாக; அப்போது படும் கஷ்டம் பொறுக்க முடியாததாம். இப்படி அவர்கள் படும் கஷ்டத்தைக் கண்டு அந்த மதத்தை வெறுத்துத் திருவேங்கடமுடை யானுக்குத் தொண்டுபூண்டு மகிழப்பெற்றாயே நெஞ்சமே! என்று உகக்கிறார்;. “தெருவில் திரி சிறு நோன்பியர்செஞ்சோற்றோடு கஞ்சிமருவிப் பிரிந்தவர் வாய்மொழி மதியாது வந்தடைவீர்” என்று மேல் ஏழாம்பத்திலே அருளிச்செய்யும் பாசுரமும் இங்குக் குறிக்கொள்ளத் தகும்.
(அலக்கண்-துன்பம்.)
வானிடை அருக்கன் மேவி நிற்பாற்கு = வைதிகர்கள் வணங்கும்படியாக ஸூர்ய மண்டலத்திலே எழுந்தருளி யிருப்பவனென்கை. “த்யேயஸ் ஸதா ஸவித்ருமண்டல மத்யவர்த்தீ நாராயண:” என்று முப்போதும் அநுஸந்திக்கிறோமிறே
English Translation
O Heart! See the distress of the polemic Sramanas who gulp curd-rice down their throats! The Lord resides in Venkatam where bees sing the Marul love-songs around his temple: he is the soul of the sun in the sky. Today you too have entered into his service.
