(1025)
அம்பர மனல்கால் நிலம் சலமாகிநின்ற வமரர்கோன் *
வம்புலா மலர்மேல் மலிமட மங்கை தன் கொழுநனவன்*
கொம்பினன்ன விடைமடக் குறமாதர் நீளிதணந்தொறும்*
செம்புனமவை காவல்கொள் திருவேங்கடமடை நெஞ்சமே !
பதவுரை
அம்பரம் அனல் கால் நிலம் சலம் ஆகி நின்ற | – | ஆகாயம் நெருப்பு காற்று பூமி ஜலம் ஆகிய பஞ்சபூதஸ்வ ரூபியும் |
அமரர் கோன் | – | நித்ய ஸூரிகட்குத் தலைவனும் |
வம்பு உலாம் மலர்மேல் மலி மட மங்கை தன் | – | பரிமளம் உலாவுகின்ற தாமரை மலரின் மேலே பொருந்திய பெரிய பிராட்டியாருக்கு |
கொழுநன் அவன் | – | நாயகனுமான எம்பிரான் எழுந்தருளியிருக்கப் பெற்றதும், |
நீள் இதணம் தொறும் | – | உயர்ந்த பரண்கள் தோறும் |
கொம்பின் அன்ன இடை | – | வஞ்சிக் கொம்போடு ஒத்த (நுண்ணிய) இடுப்பையுடைய |
மட குற மாதர் | – | மடமை தங்கிய குறப்பெண்கள் |
செம்புனம் அவை காவல் கொள் | – | செவ்விய வயல்களைக் காவல் செய்து கொண்டிருக்கப் பெற்றதுமான |
திருவேங்கடம் நெஞ்சமே! அடை-. | ||
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய விளக்க உரை
#1025
அம்பரம், அனல், கால், நிலம், சலம் ஆகி நின்ற அமரர்-கோன்,
வம்பு உலாம் மலர்மேல் மலி மடமங்கை -தன் கொழுநன்-அவன்,
கொம்பின் அன்ன இடை மடக் குறமாதர் நீள் இதணம்தொறும்
செம் புனம்-அவை காவல் கொள் திருவேங்கடம் அடை, நெஞ்சமே! (1-8-8)
* * *-(அம்பரமனல்கால்நிலம்.) கீழ்ப்பாட்டில் “பாரு நீரெரி காற்றினோடு ஆகாயமுமிவையாயினான்” என்ற முதலடியிற் சொன்ன அர்த்தமே இப்பாட்டிலும் முதலடியிற் சொல்லப்படுகிறது. அம்பரம் – ஆகாயம்; தற்சம வடசொல். பிருதிவி, அப்பு, தேஜஸ், வாயு, ஆகாசம் என்கிற பஞ்சபூதஸ்வ ரூபியானவனும், நித்யஸூரிகளுக்குத் தலைவனும், அலர்மேல் மங்கைக்குத் துணைவனுமான எம்பெருமான் எழுந்தருளியிருக்கப்பெற்ற திருமலையைச் சென்று சேர்மனமே!.
அஃது எப்படிப்பட்டதென்னில்; கொம்பினன்னவிடை மடக்குறமாதர் நீளிதணந்தொறும் செம்புனமவை காவல்கொள்ளப்பெற்றது. குறத்திகள் மலைகளிலே வாஸஞ் செய்பவர்கள்; புனங்காத்தல் அவர்களது தொழிலாகும்; (அதாவது- பட்டிமேய வொண்ணாதபடி நிலங்களைக் காப்பாற்றுதல்.) உயரமான பரண்களை அமைத்துக்கொண்டு அவற்றிலே கிடந்து காப்பர்கள்; இதனை ஸ்வபாவோக்தியாக இங்கு அருளிச் செய்தாராயிற்று. ‘இதணம்’ என்றும் ‘ இதண் ‘ என்றும் காவற்பரணுக்குப் பெயர். ….. ….. …. (8)
English Translation
He is manifest in Earth, Water, Fire, Wind and space. He is the king of gods, the bee-humming lotus dame Lakshmi’s spouse. Thin waisted gypsy women sit on lofts in the treetops and watch over the tracts of red soil in Tiruvenkatam,- thitherward, o Heart!
