(1024)

(1024)

பாரு நீரெரி காற்றினோ டாகாசமுமிவை யாயினான் * 

பேருமாயிரம் பேசநின்ற பிறப்பிலி பெருகுமிடம் 

காரும்வார்பனி நீள்விசும்பிடைச் சோருமாமுகில் தோய்தர * 

சேரும் வார்பொழில் சூழெழில் திருவேங்கடமடை நெஞ்சமே !

பதவுரை

பாரும் நீர் எரி காற்றினோடு ஆகாசமும் இவை ஆயினான்

பூமி ஜலம் தேஜஸ் வாயு ஆகாசம் என்கிற பஞ்சபூத ஸ்வரூபியானவனும்

ஆயிரம் பேரும் பேச நின்ற

ஸஹஸ்ர நாமங்களாலும் பிரதி பாதிக்கப்படா நிற்பவனும்

பிறப்பு இலி

(கருமமடியாகப்) பிறத்தல் இல்லாதவனுமான எம்பெருமான்

பெருகும் இடம்

வளருகிற இடமானதும்,-

நீள் விசும்பிடை

பெரிய ஆகாசத்தினின்றும்

காரும் வார் பனி

மழைநீரும் மிக்க பனித்துளியும்

சோரும்

பெய்யப்பெற்றதும்

மாமுகில் தோய்தர

(மேலுள்ள) காள மேகங்கள் வந்து படியும்படியாக

சேரும்

பொருத்தமான

வார்

உயரவோங்கியிருக்கிற

பொழில்

சோலைகளாலே

சூழ்

சூழப்பெற்றதும்

எழில்

அழகியதுமான

திருவேங்கடம் நெஞ்சமே! அடை-.

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய விளக்க உரை

 #1024

பாரும், நீர், எரி, காற்றினோடு ஆகாசமும், இவை ஆயினான், 

பேரும் ஆயிரம் பேச நின்ற பிறப்பிலி பெருகும் இடம் 

காரும் வார் பனி நீள் விசும்பிடைச் சோரும் மா முகில் தோய்தர, 

சேரும் வார் பொழில் சூழ் எழில் திருவேங்கடம் அடை, நெஞ்சமே! (1-8-7)


        * * *–[பாருநீரெரி.) பிருதிவி, அப்பு, தேஜஸ், வாயு, ஆகாசம் என்கிற பஞ்சபூத ஸ்வரூபியாக நிற்பவன் என்று சொன்னது-ஸகல லோகங்களும் தானிட்ட வழக்கா யிருக்குமவன் என்றபடி. அப்படிப்பட்டவனும் ஸஹஸ்ர நாமங்களால் துதிக்கப்படுபவனும் கருமங்களுக்கு வசப்படா தவனுமான எம் பெருமான் தன்னுடைய பெருமை யெல்லாம் தோற்ற எழுந்தருளியிருக்குமிடம் திருவேங்கடம்; அஃது எப்படிப்பட்டதென்றால்; ஆகாசத்தில் நின்றும் மழை பெய்யவும் பனி பெய்யவும் பெற்றது; மேகங்கள் வந்து படியும்படியான (மேக மண்டலம் வரையில் ஓங்கின) உயர்த்தியையுடைய சோலைகளாலே சூழப்பட்டது. அதனைச் சென்று சேர் நெஞ்சே!

English Translation

 

He became the Earth, Water, Fire, Wind and Space. He is spoken of by a thousand names. He is birthless. He prospers amid groves with dew and fog, under a big sky that pours incessantly in Tiruvenkatam, – thitherward, O Heart!

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top