(1017)
செங்கணாளி யிட்டிறைஞ்சும் சிங்கவேள் குன்றுடைய *
எங்களீச னெம்பிரானை யிருந்தமிழ் நூற்புலவன் *
மங்கையாளன் மன்னுதொல்சீர் வண்டறை தார்க் கலியன்
செங்கையாளன் செஞ்சொல்மாலை வல்லவர் தீதிலரே.
பதவுரை
| செம்கண் ஆளி | – | சிவந்த கண்களையுடைய சிங்கங்கள் |
| இட்டு | – | (தமக்குக் கிடைத்த யானைத் தந்தம் முதலியவற்றைத்) திருவடிகளிலே ஸமர்ப்பித்து |
| இறைஞ்சும் | – | வணங்குமிடமான |
| சிங்க வேழ் குன்று உடைய | – | சிங்கவேழ் குன்றத்தை இருப்பிடமாகவுடையனாய் |
| எங்கள் ஈசன் | – | ஸம்ஸாரிகளான நமக்கெல்லார்க்கும் ஸ்வாமியாய் |
| எம் பிரானை | – | நமக்கு உபகாரகனாயுமுள்ள ஸ்ரீ நரஸிம்ஹமூர்த்தி விஷயமாக, |
| இரு தமிழ் நூல் புலவன் | – | பெரிய தமிழ் சாஸ்த்ரத்தில் வல்லவராய் |
| மங்கை ஆளன் | – | திருமங்கை நாட்டுக்குத் தலைவராய் |
| மன்னு தொல்சீர் | – | நித்யஸித்தமான ஸ்ரீ வைஷ்ணவலஷ்மியை உடையவராய் |
| வண்டு அறைதார் | – | வண்டுகள் படிந்து ஒலி செய்கின்ற மாலையை யணிந்தவராய் |
| செம் கை ஆளன் | – | மிக்க உதாரரான |
| கலியன் | – | ஆழ்வாரருளிச்செய்த |
| செம் சொல் மாலை | – | செவ்விய இச்சொல் மாலையை |
| வல்லவர் | – | ஓதவல்லவர்கள் |
| தீது இலர் | – | தீமை யொன்றுமின்றி நன்மை பெற்றவராவர். |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய விளக்க உரை
#1017
செங் கண் ஆளி இட்டு இறைஞ்சும் சிங்கவேழ்குன்று உடைய
எங்கள் ஈசன் எம் பிரானை இருந் தமிழ் நூல்–புலவன்,
மங்கை ஆளன் மன்னு தொல் சீர் வண்டு அறை தார்க் கலியன்,
செம் கை ஆளன் செஞ்சொல் மாலை வல்லவர் தீது இலரே. (1-7-10)
* * *- (செங்கணாளி) வீரலக்ஷ்மி விளங்குங் கண்களையுடைய சிங்கங் களானவை யானைக்கோடு முதலியவற்றைக் கொண்டு ஸமர்ப்பித்து வணங்குமிட மான சிங்கவேழ் குன்றத்திலே யெழுந்தருளியிருக்கின்ற எம்பெருமான் விஷயமாகத் திருமங்கை மன்னன் அருளிச்செய்த சொல்மாலையை ஓதவல்லவர்கள் தீங்கின்றி வாழ்வார்கள் என்று – இத்திருமொழி கற்றார்க்குப் பலன் சொல்லித் தலைக்கட்டினாராயிற்று.
செங்கணாளியிட்டிறைஞ்சும் என்றவிடத்து –“नवं शवमिदं पुण्यं वेदपारगमच्युत | यज्ञ्शीलं महाप्राज्ञं ब्राह्मणं शिवमुत्तमम् || நவம் சவமிதம் புண்யம் வேதபாரகமச்யுத – யஜ்ஞ்சீலம் மஹா ப்ராஜ்ஞம் ப்ராஹ்மணம் சிவ முத்தமம்” என்ற கண்டாகர்ணனுடைய வசனம் நினைக்கத்தகும். அவன், தனக்கு உண வாகிய பிணங்களை எம்பெருமானுக்கு நிவேதநஞ் செய்து உண்டது போல, சிங்கங்க ளும் செய்கிறபடி. …… ……. …. …… (10)
அடிவரவு: – அங்கண் அலை ஏய்ந்த எவ்வம் மென்றெரி முனைத்த நா நல்லை செங்கண் கொங்கு.
ஏழாந்திருமொழி உரை முற்றிற்று.
ஆழ்வார் திருவடிகளே சரணம்.
ஜீயர் திருவடிகளே சரணம்
English Translation
The red eyed lions worship with offerings our Lord of Singavel-Kundram. He is our Lord and master, praised with songs by the poet of pure Tamil, benevolent king of Mangai-tract, kaliyan, who wears a bee-humming garland. Those who master it will be free of evil.
