(1620)

(1620)

குலத்தலைய மதவேழம் பொய்கை புக்குக் கோள்முதலை பிடிக்க அதற் கனுங்கி நின்று,

நிலத்திகழும் மலர்ச்சுடரேய் சோதீ என்ன நெஞ்சிடர்தீர்த் தருளியவென் நிமலன் காண்மின்,

மலைத்திகழ்சந் தகில்கனக மணியும் கொண்டு வந்துந்தி வயல்கள்தொறும் மடைகள் பாய,

அலைத்துவரும் பொன்னிவளம் பெருகும் செல்வத் தணியழுந்தூர் நின்றுகந்த அமரர் கோவே.

 

பதவுரை

மலை திகழ் சந்து அகில் கனகம் மணியும்

ஸஹ்யமலையினிடத்துப் பொருந்தி விளங்குகின்ற சந்தன மரங்களையும் அகிற் கட்டைகளையும் பொன்னையும் ரத்னங்களையும்

கொண்டு வந்து

திருட்டிக்கொணர்ந்து

உந்தி

தள்ளி

வயல்கள் தோறும் மடைகள் பாய

கழினிகளிலெல்லாம் நீர்பாயும்

அலைத்து வரும்

அலையெறிந்து கொண்டு வாரா நின்றுள்ள

பொன்னி

காவேரியினால்

வளம் பெருகும்

செழிப்பு மிகப்பெற்ற

செல்வத்து

சிறப்பையுடைய

அணி அழுந்தூர் நின்று உகந்த அமரர் கோ-;  (யாவனென்னில்)

குலம் தலைய மதம் வேழம்

நல்ல சாதியிற் பிறந்த யானைகட்குள்ளே தலைமையையுடைய மதங்கொண்ட கஜேந்திராழ்வான்

பொய்கைபுக்கு

தடாகத்திலிறங்கின போது

கோள் முதலை பிடிக்க

வலிமையையுடைய  முதலையானது  (தன்னைப்) பிடித்திழுத்ததனால்

அதற்கு அணுங்கி நின்று

அம்முதலைக்கு அஞ்சி நின்று

நில திகழும் மலர் சுடர் ஏய் சோதீ

நிலாவிளங்குகின்ற பரவுதலையுடைய சந்திரனை ஒத்த குளிர்ந்த ஒளியை (தண்ணளியை) யுடையவனே!

என்ன

என்று ஓலமிட்டுத்துதிக்க

நெஞ்சு இடர் தீர்த்து அருளிய

(அந்த கஜேந்திரனது) மனத்துன்பத்தை நீக்கியருளிய

எம் நிமலன்

எமது குற்றமற்ற கடவுளாவன.

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- நிலா – நிலா; “குறியதன் கீழ் ஆக்குறுகலும்” என்பது நன்னூல். (மலைத்திகழ் இத்யாதி.) ஸஹ்ய பர்வதத்தினின்று உத்பத்தியாகிப் பெருவெள்ளமாய்ப் பெருகிவரும் விசையில் குறிஞ்சி நிலக் கருப்பொருளாகிய சந்தனம் முதலியவற்றைப் புரட்டியடித்துக் கொண்டுவருங் காவேரி தான் கொண்ர்ந்துவரும் சந்தனம் முதலியவைகள் கழனிகளில் நீர்மடை வழியாகப் பாய்தலினால் மிக்க வளத்தை யுண்டாக்கிப் பெருஞ் சிறப்பை இத் திருவழுந்தூர்க்கு விளைக்குமென்க.  “மலைத்தலைய கடற்காவிரி, புனல் பரந்து பொன் கொழிக்கும்” என்கிறபடியே தான் பெருகும் பொழுது பொன்னைக் கொழித்துக் கொண்டு வருதலால் காவேரிக்குப் பொன்னியென்று பெயர்.  இ -உடைமைப் பொருள் காட்டும் பெண்பால் விகுதி.  எம்பெருமான் தான் பெருந்துயரத்தினால் வருந்துகின்ற அன்பருள்ள விடங்களிற் சென்று பாதுகாப்பது போலவே இக்காவேரியின் வெள்ளமும் வேண்டுமடங்களிலெல்லாம் வந்து பாயமென நயந்தோன்றுமாறு இங்கு அருளிச் செய்யப்பட்டுள்ளமை உய்த்துணரத்தக்கது.

 

English Translation

Then in the yore the elephant devotee in the lake fell to the tight grip of the crocodile-jaws, and called out “Lord help me, Moon-like radiance!”, when the Lord came and rid him of misery.  Mountain spring washes out fragrant wood and gold, gems and flows down the plains and fields as Kaveri river beautiful and ere green, Ani-alundur where resides the Lord of all gods!

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top