(1621)
சிலம்புமுதல் கலனணிந்தோர் செங்கண் குன்றம் திகழ்ந்ததெனத் திருவுருவம் பன்றி யாகி,
இலங்குபுவி மடந்தைதனை யிடந்து புல்கி எயிற்றிடைவைத் தருளியவெம் மீசன் காண்மின்,
புலம்புசிறை வண்டொலிப்பப் பூகம் தொக்க பொழில்கடொறும் குயில்கூவ மயில்க ளால
அலம்புதிரைப் புனல்புடைசூழ்ந் தழகார் செல்வத் தணியழுந்தூர் நின்றுகந்த அமரர் கோவே
பதவுரை
|
பூகம் தொக்க |
– |
பாக்கு மரங்கள் நிறைந்துள்ள |
|
பொழில்கள் தோறும் |
– |
சோலைகளிலெங்கும் |
|
சிறை புலம்பு வண்டு ஒலிப்ப |
– |
சிறகு களையுடையனவாய் ரீங்காரஞ் செய்யுந்தன்மை யனவான வண்டுகள் ஒலிக்கவும் |
|
குயில் கூவ |
– |
குயில்கள் கூவவும் |
|
மயில்கள் ஆல |
– |
மயில்கள் கூத்தாடவும் |
|
அலம்பு திரை புனல் புடை சூழ்ந்து |
– |
அலைகின்ற அலைகளை யுடைய காவிரியின் நீரானத பக்கங்களிலே சுற்றிப் பாய்தலினால் |
|
அழகு ஆர் |
– |
அழகு மிக்கிருக்கின்ற |
|
செல்வத்து |
– |
சிறப்பையுடைய |
|
அணி அழுந்தூர் நின்ற உதந்த அமரர் கோ-; (யாவனென்னில்) |
||
|
செம் கண் ஓர் குன்றம் |
– |
சிவந்த கண்களை யுடையதொரு மலை |
|
சிலம்பு முதல் கலன் அணிந்து |
– |
தண்டை முதலிய ஆபரணங்களைப் பூண்டு |
|
திகழ்ந்தது என |
– |
விளங்குவது போல |
|
திரு உருவம் பன்றி ஆகி |
– |
மஹாவராஹரூபியாய், |
|
இலங்கு புவி மடந்தை தனை |
– |
விளங்குகின்ற பூமிப்பிராட்டியை |
|
இடந்து |
– |
(அண்டபித்தியினின்றுங் கோட்டாற்) குத்தியெடுத்து |
|
புல்கி |
– |
அணைந்து |
|
எயிற்றிடை |
– |
(தனது) கோரதந்தத்தினிடத்தில் |
|
வைத்து அருளிய |
– |
வைத்தருளினவனான |
|
எம் ஈசன் |
– |
எமது தலைவனாவன். |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- “சிலம்பு முதற்கலனணிந்தோர் செங்கட் குன்றம்” என்றது மஹா வராஹத்துக்கு அபூதோபமை (இல்பொருளுவமை) யாம். “செங்கற்குன்றம்” ன்ற பாடமே வியாக்கியானத்திற்கு இணங்கியது. சிவந்த ரத்னங்களையுடைய மேருமலை யென்று பொருள். கலன் – கலம் என்பதன் ஈற்றுப்போலி. ஆலுதல் – ஆரவாரித்தலுமாம்.
English Translation
Lord came as mountain-red bear, and young, with anklets and many other jewels shining on frame, lifting the Dame Earth from deluge waters, he kept her on his tusk, Lord, -behold ye! Bumble bees him over Areca fronds in groves where many cuckoos and peacocks dancesing, gushing with waters, the Ponni flows by Ani-alundur where resides the Lord of all gods!
