(1626)
ஊடேறு கஞ்சனொடு மல்லும் வில்லும் ஒண்கரியு முருள்சகடு முடையச் செற்ற,
நீடேறு பெருவலித்தோ ளுடைய வென்றி நிலவுபுகழ் நேமியங்கை நெடியோன் காண்மின்,
சேடேறு பொழில்தழுவு மெழில்கொள் வீதித் திருவிழவில் மணியணிந்த திண்ணை தோறும்
ஆடேறு மலர்க்குழலார் பயிலும் செல்வத் தணியழுந்தூர் நின்றுகந்த அமரர் கோவே.
பதவுரை
|
சேடு ஏறு |
– |
இளமைமிக்குத் தோன்றுகின்ற |
|
பொழில் |
– |
சோலைகளால் |
|
தழுவும் |
– |
அணையப்பெற்ற |
|
எழில் கொள் வீதி |
– |
அழகிய தெருக்களிலே நடக்கின்ற |
|
திரு விழவில் |
– |
திருவிழாக்களிலே |
|
மணி அணிந்த திண்ணை தோறும் |
– |
ரத்நங்கள் பதிக்கப்பெற்ற திண்ணைகளிலெல்லாம் |
|
ஆடு எறு |
– |
கூத்தாடும் தொழிலில் வல்லவர்களான |
|
மலர் குழலார் |
– |
மலர்களையணிந்த கூந்தலை யுடைய மகளிர் |
|
பயிலும் |
– |
நெருங்கியிருக்கப்பெற்ற |
|
செல்வத்து |
– |
சிறப்பையுடைய |
|
அணி அழுந்தூர் நின்று உகந்த அமரர் கோ-; (யாவனென்னில்;) |
||
|
ஊடு ஏறு கஞ்சனொடு |
– |
(மஞ்சத்தில்) மத்தியில் ஏறியுள்ள கம்ஸனும் |
|
மல்லும் |
– |
மல்லர்களும் |
|
வில்லும் |
– |
(தனுர்யாகத்தில் வைக்கப்பட்டிருந்த) வில்லும் |
|
ஒள் கரியும் |
– |
அழகிய (குவலயாபீடமென்னும்) யானையும் |
|
உருள் சகடும் |
– |
உருண்டு செல்லுந் தன்மைய தான சகடமும் |
|
உடைய |
– |
அழிந்தொழியும்படி |
|
செற்ற |
– |
அழித்திட்ட |
|
நீடு ஏறு பெருவலி தோள் உடைய |
– |
நீண்டு உயர்ந்துள்ள மிக்க வலிமைகொண்ட தோள்களையுடையவனும் |
|
வென்றி நிலவு புகழ் நேமி அம் கை |
– |
வெற்றியினால் விளங்குகின்ற புகழையும் சக்கரமேந்திய கைகளையுமுடையனுமான |
|
நெடியோன் |
– |
பரமபுருஷனானவன். |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- சேடு – அழகு, இளமை, பெருமை. திருவழாக்காலங்களில் வீதியில் நடக்கும் அத்திருவிழாவைக் காணும் பொருட்டு வீதியின் இருபுறங்களிலுமுள்ள மாளிகைகளின் திண்ணைகளின் ஆடலில்வல்ல மடவார் ஏறியிருக்கப்பெற்ற திருவழுந்தூரென்பன பின்னடிகளில். “ஆடு ஏறும் மலர்க்குழலார்” – ‘நறுமணம் மிக்க மலர்களைச்சூடிய கூந்தலையுடைய மடவார்’ என்று வியாக்கியானத்தி லுரைக்கப் பட்டுள்ளது.
English Translation
The Lord of gods resides in beautiful Alundur surrounded by fertile groves, and rows of gem-houses lining the streets in whose porticos flower-coiffured dames crows and watch the festival! processions, see, he is the Lord who destroyed Kamsa’s wrestlers, his bow, his elephant, and a demon-cart. He is the Lord with boundless strength in hi arms, and bears a victorious discus.
