(1627)

(1627)

பன்றியாய் மீனாகி யரியாய்ப் பாரைப் படைத்துக்காத் துண்டுமிழ்ந்த பரமன் றன்னை,

அன்றமரர்க் கதிபதியும் அயனும் சேயும் அடிபணிய அணியழுந்தூர் நின்ற கோவை,

கன்றிநெடு வேல்வலவ னாலி நாடன் கலிகன்றி யொலிசெய்த வின்பப் பாடல்,

ஒன்றினொடு நான்குமோ ரைந்தும் வல்லார் ஒலிகடல்சூ ழுலகாளு மும்பர் தாமே.

 

பதவுரை

அன்று

முன்பொருகாலத்தில்

பன்றி ஆய்

வராஹாவதாரமாகியும்

மீன் ஆகி

மத்ஸ்யாவதாரமாகியும்

அரி ஆய்

நரஸிம்ஹாவதாரமாகியும்

பாரை

நிலவுலகத்தை

படைத்து

ஸ்ருஷ்டித்தும்

காத்து

ரக்ஷித்தும்

உண்டு

பிரளய காலத்தில் உட்கொண்டும்

உமிழ்ந்த

(அந்தப்பிரளயம் நீங்கினவாறே வெளிநாடுகாண) உமிழ்ந்துமருளிய

பரமன் தன்னை

பரம்பொருளானவனும்

அமரர்க்கு அதிபதியும்

தேவர்கட்குத் தலைவனான இந்திரனென்ன

அயனும்

பிரம்மதேவனென்ன

சேயும்

அவனது மகனான சிவபிரானென்ன ஆகிய இவர்கள்

அடிபணிய

தனது திருவடிகளை வணங்கும்படி

அணி அழுந்தூர் நின்ற

திருவழுந்தூரில் நின்ற திருக்கோலமாக எழுந்தருளியிருக்கிற

கோவை

தேவாதிதேவனுமான எம்பெருமானைப்பற்றி

கன்றி நெடு வேல் வலவன்

சினங்கொண்டு நீண்டுள்ள வேற்படையில் வல்லவரும்

ஆலி நாடன்

திருவாலிநாட்டுக்குத் தலைவரும்

கலிகன்றி

கலிகன்றியென்னும் திருநாமமுடையவருமான திருமங்கை யாழ்வார்

ஒலிசெய்த

இன்னோசையுடையனவாம்படி பாடியருளிய

இன்பம் பாடல்

மதுரமான பாடல்களான

ஒன்றினோடு நான்கும் ஓர் ஐந்தும்

இப் பத்துப் பாசுரங்களையும்

வல்லார்

ஓதியுணர்ந்தவர்கள்

ஒலிகடல் சூழ்

ஒலிக்கின்ற கடலாற் சூழப்பட்ட

உலகு

இவ்வுலகங்களை

ஆளும்

ஆளவல்ல

உம்பர் தாம்

தேவர்களாவர்.

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- அவதாரங்கட்கு மூலமான பாற்கடலிற் பள்ளிகொள்ளும் வ்யூஹமூர்த்தியை ஒரு பாசுரத்திலும், அங்கு நின்று விலங்காகித் திருவவதரித்தமையை உ.ச.ரு.க0. (2, 4, 5, 10) ஆம் பாசுரங்களாகிய நான்கு பாடல்களிலும், கஜேந்திர ரக்ஷணத்தின் பொருட்டாகவும் வாமந ராம க்ருஷ்ண ரூபமாகவும் வந்து அவதரித்தமையை மற்றை ஐந்து பாடல்களிலுமாக இவ்வாறு தாம் பாடி அநுபவித்தமை தோற்ற ‘ஒன்றினொடு நான்கும் ஓரைந்தும்’ என்று பிரித்தருளிச் செய்தாரெனலாம்.

 

English Translation

This garland of sweet ten songs by spear-wielding Alinadon Kalikanri extols the Lord of Beautiful Alundur, -who came as a boar, a fish and a man-lion, who made, swallowed and remode the Universe, and who is worshipped by Indra, Brahma, siva and all other gods.  Those who master it will become gods and rule the Earth.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top