(1573)
எட்ட னைப்பொழு தாகிலு மென்றும் என்ம னத்தக லாதிருக் கும்புகழ்,
தட்ட லர்த்தபொன் னைஅலர் கோங்கின் தாழ்பொ ழில்திரு மாலிருஞ் சோலையங்
கட்டி யை,கரும் பீன்றவின் சாற்றைக் காத லால்மறை நான்குமுன் னோதிய
பட்ட னை,பர வைத்துயி லேற்றையென் பண்ப னையன்றிப் பாடல்செய் யேனே!
பதவுரை
|
எள் தனை பொழுது ஆகிலும் |
– |
எள்ளத்தனை நொடிப் பொழுதுங் கூட |
|
என் மனத்து அகலாது |
– |
என் மனத்தைவிட்டுப் பிரியாமல் |
|
என்றும் |
– |
எக்காலத்திலும் |
|
இருக்கும் |
– |
என் மனக்தே யிருக்கையினாலாகிய |
|
புகழ் |
– |
கீர்த்தியையுடையவனும் |
|
தட்டு அலர்த்த |
– |
தட்டுப்போலே விகஸிப்பிக்கப்பட்ட |
|
பொன் ஏய் அலர் |
– |
பொன் போன்ற அலரை யுடைத்தான |
|
கோங்கின் |
– |
கோங்குமரங்களினுடைய |
|
தாழ் பொழில் |
– |
தழைத்த தோப்புகளையுடைய |
|
தருமாலிருஞ் சோலை |
– |
திருமாலிருஞ்சோலையிலெழுந் தருளியிருக்கிற |
|
அம் கட்டியை |
– |
மதுரமான கற்கண்டுபோல் போக்யனாயிருப்பவனும், |
|
கரும்பு ஈன்ற இன் சாற்றை |
– |
கரும்பில் நின்று முண்டான இனிய ரஸம்போன்றவனும், |
|
முன் |
– |
முற்காலத்தில் |
|
காதலால் |
– |
அன்புடனே |
|
மறை நான்கும் |
– |
நால்வேதங்களையும் |
|
ஓதிய |
– |
(ஸாந்தீபிநி பக்கலில்) அத்யயனம் பண்ணின |
|
பட்டனை |
– |
பண்டிதனும் |
|
பரவை |
– |
(திருப்பாற்) கடலில் |
|
துயில் |
– |
கண்வளர்ந்தருளினாநின்ற |
|
ஏற்றை |
– |
பரமபுரஷனும் |
|
என் பண்பனை அன்றி |
– |
எனக்கு எளியனுமான திருநறையூர் நம்பியைத்தவிர |
|
(மற்றொருவரையும்)
|
||
|
பாடல் செய்யேன் |
– |
பாடமாட்டேன் |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- “ஒருமா நொடியும் பிரியான்” என்னுமாபோலே க்ஷணகாலமும் என்னெஞ்சை விட்டுப்பிரிகிறதில்லை யென்னுமிதுவே காரணமாகப் பெரும்புகழோங்கப் பெற்றவனும் திருமாலிருஞ் சோலையில் பரமபோக்யமாக ஸேவை ஸாதிப்பவனும் கருப்பஞ்சாறு போலே ரஸமயனாயிருப்பவனும்? க்ருஷ்ணாவதாரத்தில் ஸாந்தீபிநி யென்னுமோர் அந்தணன் பாடே நான்கு வேதங்களையு மோதிப் பாண்டிதயம் பெற்றவனும் திருப்பாற்கடலிலே துயில் கொள்பவனும் தனது திருக்குணங்களை யெல்லாம் என்னை யநுபவிப்பித்தவனுமான திருநறையூர் நம்பியைத் திருக்குணங்களை யெல்லாம் என்னை யநுபவித்துவனுமான திருநறையூர் நம்பியைத் தவிர்த்து மற்றொருவனையும் பாடமாட்டே னென்கிறார்.
எள் + தனை, எட்டனை; மிகச்சிறிய அளவுக்கு எள்ளை உவமை கூறுவதுண்டு; க்ஷண காலமும் என்றபடி.
தட்டலர்த்த பொன்னேயலர்கோங்கு = திருமாலிருஞ் சோலை மலையை வருணிப்பவர்களனைவரும் அங்கே கோங்குமரங்கள் விசேஷமாயுள்ளனவாக வருணிப்பவர்கள்; “கோங்கு நின்று பொன்னரிமாலைகள் சூழ்பொழில் மாலிருஞ் சோலையதே” என்றார் பெரியாழ்வார்; “கோங்கலரும் பொழில் மாலிருஞ் சோலை என்றாள் சூடிக்கொடுத்த சுடர்க்கொடி. கோங்கு மலர் பொன்போன்ற நிறமுடையது; மலர்ந்தால் பொன் தட்டுப்போல விருக்கும்; ஆகவே “தட்டலர்த்த பொன்னேயலர் கோங்கின்” எனப்பட்டது.
‘மறைநான்கும் முன்னோதிய பட்டனை’ என்பதற்கு என்கிற சுருதியின் படியே நான்முகனுக்கு நான்மறைகளையும் உபதேசித்தவனை என்று பொருள் கொள்ளவுமாம். அப்போது ‘ஓதிய’ என்பதற்கு ‘ஓதுவித்த’ என்ற பிறவினைப்பொருள் கொள்ளவேணும்.
English Translation
High reputed Sugar-Lord who resides in my good heart and never leaves for a moment! Lord of sweetness like the cane-sugar-juice and resident of Tiru-Maliurmsolai! -where the kongu trees shower golden-hue petals, Over the Lord who is the Master of Vedas-four, Praising him who is fond of deep ocean, my god tongue does not sing of another, O!
