(1575)

(1575)

இனியெப் பாவம்வந் தெய்தும்சொல் லீர் எமக் கிம்மை யேயருள் பெற்றமை யால்,அடும்

துனியைத் தீர்த்தின்ப மேதரு கின்றதோர் தோற்றத் தொன்னெறி யை,வையம் தொழப்படும்

முனியை வானவ ரால்வணங் கப்படும் முத்தி னைப்பத்தர் தாம்நுகர் கின்றதோர்

கனியை, காதல்செய் தென்னுள்ளங் கொண்ட கள்வ னையின்று கண்டுகொண் டேனே.

 

பதவுரை

இம்மையே

இஹலோகத்திலேயே

அருள் பெற்றமையால்

எம்பெருமானுடைய திருவருளைப் பெற்றேனாதலால்

இனி

இனிமேல்

எமக்கு

எம்மை

எப் பாவம்

எவ்விதமான பாவம்

வந்து எய்தும்

வந்து கிட்டக்கூடும்

சொல்வீர்

சொல்லுங்கள்;

அடும்

ஆத்மஹாநியை விளைக்கிற

துனியை

கருமங்களை

தீர்த்து

தவிர்த்து

இன்பமே

நித்யாநந்தத்தையே

தருகின்றது

தருகின்ற

ஓர் தோற்றம் தொல் நெறியை

ஒப்பற்ற விலக்ஷணமாய் அநாதியான உபாயமாயிருப்பவனும்

வையம்

உலகத்தவர்களால்

தொழப்படும்

ஆச்ரயிக்கப்படுகின்றவனும்

முனியை

(அவர்களுடைய நன்மைகளைச்) சிந்திப்பவனும்

வானவரால் வணங்கப்படும்

நித்யஸூரிகளால் வணங்கப்படுகின்ற

முத்தினை

முத்துப்போன்றவனை

பத்தர் தாம்

பக்தர்களால்

நுகர்கின்றது

உட்கொள்ளப்படுகின்ற

ஓர் கனியை

ஒரு பழம்போன்றவனும்

காதல் செய்து

ஆசையுற்று

என் உள்ளம் கொண்ட

என் நெஞ்சைக் கொள்ளை கொண்ட

கள்வனை

கள்ளவனுமான பெருமானை

இன்று கண்டுகொண்டேன்-.

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- பாசுரந் தொடங்கும்போதே “இனி யெப்பாவம் வந்தெய்தும் சொல்வீர்” என்று கம்பீரமாகத் தொடங்குகிற மிடுக்கு நோக்கத்தக்கது.  இனிப் பரமபதமென்று வேறொரு ஸ்தாநவிசேஷமுண்டென்றும் அங்குப்போய்ப் பெறவேண்டிய பேறு வேறொன்று இருக்கின்றதென்றும் தாம் கொண்டிலாமையைத் தெரிவிக்கின்றார் ‘இம்மையே அருள் பெற்றமையால்’ என்று.  ஸகல பாபங்களும் தொலைந்து பெறவேண்டிய பேறு இப்பிறவிதன்னிலே இவ்வுலகந்தன்னிலே பெறப்பட்டதாதலால் இனி ஒரு பாவமும் என்னை வந்து அணுக ப்ர ஸக்தியில்லை யென்கிறார்.

அடுந்துனியைத் தீர்த்து = துனி என்று துன்பத்திற்குப் பெயராயினும் துன்பத்திற்கு மூலகாரணமான கருமம் இங்கே பொருளாகக் கடவது;  என்ற சரமச்லோகத்தின்படியே ஸகல பாபங்களையுந் தொலைத்தருளி நித்யமான ஆநந்தத்தைத் தந்தருளவல்ல ஸித்தோபாயமான எம்பெருமானைக் கண்டுகொண்டேனென்கிறார்.  இத்யாதி ச்ருதிகளை உட்கொண்டு எம்பெருமானை ‘நெறி’ என்னுஞ் சொல்லாற் சொல்லுகிறார்.  தன்னையடைதற்குத் தானே மார்க்கமாயிருப்பனிறே எம்பெருமான்.

 

English Translation

In this world and life, he has given me his grace, now no karma can gather to demean me.  He is the temple-path of flower worship.  He is the Lord to whom gods offer worship.  He is a fruit of rare taste to devotees.  He is the sly wicked lover who took all of me, wipring out my sins, he has made my living sweet, pearly lustered Lord, – I have seen him here today.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top