(1566)
ஊனே ராக்கைதன்னை உழந்தோம்பி வைத்தமையால்,
யானா யென்றனக்கா யடியேன் மனம்புகுந்த
தேனே தீங்கரும்பின் தெளிவே என் சிந்தைதன்னால்,
நானே யெய்தப்பெற்றேன் நறையூர்நின்ற நம்பீயோ.
பதவுரை
|
யான் ஆய் |
– |
எனக்கு அந்தராத்மாவாய் |
|
என் தனக்கு ஆய் |
– |
எனக்கு விதேயனாய்க் கொண்டு |
|
அடியேன் மனம் புகுந்து |
– |
அடியேனுடைய மனத்தினுட் பிரவேசித்த |
|
தெனே |
– |
தேன்போல் இனியவனே! |
|
தீம் கரும்பின் தெளிவே |
– |
இனிமையான கரும்பின் சாறுபோன்றவனே! |
|
நறையூர் நின்ற நம்பீயோ!- ; |
||
|
ஊன் ஏர் ஆக்கை தன்னை |
– |
மாம்ஸமயமான சரீரத்தை |
|
உழந்து |
– |
(பலவகைகளாலும்) சிரமப்பட்டு |
|
ஓம்பி வைத்தமையால் |
– |
பேணிவைத்துக்கொண்டிருந்ததனால் |
|
என் சிந்தை தன்னால் |
– |
என்னுடைய மனத்தினால் |
|
நானே எய்த பெற்றேன் |
– |
(இப்போது உன்னை) நானே வந்தடையப்பெற்றேன். |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- விசித்ரா தேஹஸம்பத்தி ரீச்வராய நிவேதிதும் – பூர்வமேவ க்ருதா ப்ரஹமந்! ஹஸ்தபாதாதி ஸம்யுதா” என்று சாஸ்திரங்களில் சொல்லப்பட்டுள்ளது; எம்பெருமானுக்கு வழிபாடுகள் செய்தற்காகவே இந்த கரணகளேபரங்கள் தந்தருளப்பட்டன வென்பது அதன் கருத்து; அப்படி பகவத் கைங்கரியத்திற்கே உபகரணமான உடலை நான் பெற்றிருந்தாலும் கீழ்க்கழிந்த காலமெல்லாம் பாழே கழிந்தனவாதலால் அவ்வுடலைக் கொண்டு ஒரு பயனும் பெறா தொழிந்தேன் முன்பெல்லாம்; இவ்வுடலை ச்ரமப்பட்டுப் போஷித்து வந்ததற்குத் தக்கபயன் இன்று பெற்றே னென்கிறார். “ஊனேராக்கை தன்னை உழந்தோம்பி வைத்தமையால் நானே எய்தப்பெற்றேன்” என்று அந்வயிப்பது. மாம்ஸம் மல்கும்படி சரீரத்தைப் பலபரிச்ரமங்கள் பட்டு வளர்த்து வந்தேனாதலால் அதன்பலனை இன்று ஸம்பாதித்துக்கொண்டே னென்கை. – சரீர மாத்யம் கலுதர்மஸாதநம்” என்கிறபடியே தர்மாநுஷ்டாநத்திற்கு இன்றியமையாத சரீரத்தைப் போஷிக்க வேண்டியது அவசியமே; இதுவரை நான் போஷித்து வந்தது பயன்பெறாதொழிந்தது; இப்போது அங்ஙனன்றியே பயன்பெற்றதாயிற்று என்று மகிழ்ந்து பேசினாராயிற்று.
English Translation
I did keep my body flesh for to take and use as fit. By me, for me and with me, you have found a place to be in my heart. Through my contemplation of you, I have held you firmly in me. Sweet as honey, sugarcane juice Naraiyur Lord-in-residence, O!
