(3898)
துயர்கெ டும்கடி தடைந்துவன் தடியவர் தொழுமின்
உயர்கொள் சோலையொண் தடமணி யொளிதிரு மோகூர்
பெயர்கள் ஆயிர முடையவல் லரக்கர்புக் கழுந்த
தயரதன் பெற்ற மரதக மணித்தடத் தினையே.
பதவுரை
|
உயர் கொள் சோலை |
– |
உன்னதமான சோலைகளையும் |
|
தயதரதன் பெற்ற மரகதம் மணி தடததினை |
– |
தசரத சக்ரவர்த்தி பெற்ற மரகத மணித் தடாகம் போன்றவனான எம்பெருமானை, |
|
ஒண் தடம் அணி |
– |
அழகிய தடாகங்களையும் |
|
ஒளி திருமோகூர் |
– |
அலங்காரமாக உடைத்தான அழகிய திருமோகூர்லே, |
|
அடியவர் |
– |
அடியீர்கள்! |
|
ஆயிரம் பெயர்கள் உடைய |
– |
ஸஹஸ்ர நாமப்ரதிபாத்யனாய் அடைந்து வந்து தொழுமின் வந்து கிட்டித் தொழுங்கோள்; |
|
வல் அரக்கர் |
– |
புக்கு அழுந்த கொடிய ராக்ஷசகர்கள் புகுந்து மடியும்படியாக |
|
துயர் கடிது கெடும் |
– |
கிலேசமெல்லாம் விரைவில் தொலைந்து போம் |
|
(அப்படித் தொழுதால்). |
||
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
* * -………….. வெளியே தாளதாமரைத் தடாகமுடைய திருமோகூர்லே ஸன்னிதிககுள்ளேயும் ஒரு தடாகம் திகழ்கின்றது; அந்தத் தடாகத்தை அடியவர்களே! வந்து தொழுமின் என்றழைக்கிறார். ஸன்னிதிக்குளளே திகழும் தடாக மெதுவென்னில்; தயரதன் பெற்ற மரகதமணித் தடம்;-…….. தசரத சக்ரவர்த்தி இராமனைப் பெற்றானல்லன்; ஒரு மரகதத் தடாகத்தையாயிற்று பெற்றான்; தடாகத்திற்கும் எம்பெருமாளுக்குமுள்ள பொருத்தங்கள் கீழே (8…5…1) *’ மாயக் கூத்தாவாமனா!* என்கிற பாட்டில் “ கண் கைகால் தூய செய்ய மலர்களா சோதிச் செவ்வாய் முகிழதா சாயல் சாமத்திருமேனி தண்பாசடையா தாமரை நீள்வாசத் தடம் போல் வருவானே’’ என்று காட்டப்பட்ன். *கரசரணஸரோஜே காந்தி மந்தேத்ர மீநே ச்ரமமுஷி புஜவீசிவ்யாகுலே அகாதமார்க்கே, ஹர்ஸரஸி * என்ற முகுந்தமாலை ச்லோகத்திலும் இப்பொருத்தம் நிரூபிக்கப்பட்டது. பட்டரும் ஸ்ரீரங்கராஜஸ்தவத்தில் * உத்புல்லபங்கஜ தடாகமிவ* பீப நயந புரஸ்தே* என்கிற இரண்டு லோகங்களினால் இப் பொருத்தத்தை நிரூபித்தருளினார். இவற்றில் விட்டுப் போன ஒரு பொருத்தம் இப்பாட்டில் காட்டப்படுகிறது. அதாவதென்னெனில்; உலகில் ஒரு தடாகம் வெட்டப்பட்டிருந்தால் அதில் பலரும் நீராடுதல் தீர்த்தம் பருகுதல் அனுட்டானம் செய்தல் முதலியன செய்து களிக்குமா போலே சிலர் தாமாகவே கழுத்தில் கல்லைக் கடடிக் கொண்டு அக்குளத்தில் வீழ்ந்து மடிந்து போவதையுங் காணா நின்றோமே; இத்தன்மை தயரதன் பெற்ற மரகத மணித் தடாகத்திற்கு முண்டென்று காட்டியருளுகிறார் வல்லரக்கர் புக்கழுந்தத் தயரதன் பெற்ற மரகத மணித் தடத்தினையே என்று. இத்தால் அரக்கர்களைப் பெருமாள் தாமாகக் கொன்று முடித்தாரல்லர்; விட்டில்கள் விளக்கிலே தாமாக விழுந்து முடிந்து போவது போல அரக்கர் தாங்களாகவே எதிரிட்டு மடிந்து முடிந்து போனார்களத்தனையென்னுமிடம் தெரிவிக்கப்பட்டதாம்.
“பெயர்களாயிரமுடைய’’ என்கிற விசேஷணம் தயரதன் பெற்ற மரகத மணித் தடமாகக் கொள்ளப்பட்ட யென்பெருமானிடத்திலே அந்வயிக்கு மென்று சிலர் கொள்ளுவார்கள்; அவ்வளவி தூராந்வயம் அவண்டர் பக்கத்திலுள்ள வல்லரக்கர்லேயே இந்வயிக்கக் குறையில்லை. இங்கே ஈட்டு ஸ்ரீஸூக்திகாண்மின்…. “ ஈச்வரன் ரக்ஷித்துப் படைத்த பெயர்களோ பாதி போருமாய்த்து இவர்கள் பரஹிம்ஸை பண்ணிப் படைத்த பெயர்; யஜ்ஞசத்ரு ப்ரஹ்மாத்ரு என்றாப் போலேயிறே இவர்கள் படைத்த பெயர்’’.
English Translation
O Devotees! Woes will run away, come quick and worship. The Lord of thousand names is also a lake of compassion. He resides in Tirumogur with lakes and lovely groves. He was born as Dasaratha’s son Rama to destroy Lanka
