(3897)

(3897)

மற்றி லமரண் வான்பெரும் பாழ்தனி முதலா

சுற்று நீர்படைத் ததன்வழித் தொன்முனி முதலா

முற்றும் தேவரோ டுலகுசெய் வான்திரு மோகூர்

சுற்றி நாம்வலஞ் செய்யநம் துயர்கெடும் கடிதெ.

 

பதவுரை

வான் பெரு பாழ் தனி முதலா

வலிதாய் அபர்ச் சிந்தமாய் போக மோஷங்களை விளைப்பதாய் அத்விதீயமான மூலப்ரக்ருத தொடக்கமாக

அதன் வழி

 

அந்த வழியாலே

தொல் முனி முதலா

 

பழைய முனிவனான ப்ரஜாபதி முதலாக

சுற்று நீர் படைத்து

ஆவரண ஜலத்தை ஸ்ருஷ்டித்து

முற்றும் தேவரோடு உலகு செய்வான்

எல்லாத் தேவ ஜாதியோடுங் கூட எல்லா உலகங்களையும் உண்டாக்குமவன் எழுந்தருளியிருக்கு இடமான

நாம சுற்றி வலம் செய்ய

நாம் சுற்றி ப்ரதக்ஷிணம் பண்ண

நம் துயர் கடிது கெடும்

நம் துக்கஙகள் விரைவில் தொலைந்து போம்

திருமோகூர்

திருமோகூரிப்பதியை

மற்று அரண் இலம்

(ஆன பின்பு இத்திருப்பதி தவிர) மற்றொரு ரக்ஷகமுடையோ மல்லோம்.

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

* * * ……..’ மற்றில மரண்’ என்று சொல்லும்படி அவன் ரக்ஷகனாகவல்லனோ வென்னில், அவருடைய ரக்ஷகத்வமிருந்தபடி பாருங்கோளென்கிறார் வான்பெரும்பாழென்று தொடங்கி, வான் பெரும்பாழென்று மூலப்ரக்ருதியைச் சொல்லுகிறது. பாழ் நிலமாயிருந்தால் அதில் அவரவர்களுக்கு வேண்டிய செடி கொடி பயிர்களை விளைத்துக் கொள்ளலாமன்றோ; அது போல மூலப்ரக்ருதியானது சேதநர்க்கு போக மோக்ஷங்களை விளைத்துக் கொள்ளவுரிய. நிலமாயிருக்கையாலும, அது தானும் எல்லை கடந்திருப்பதாலும் வான்பெரும்பாழ் என்கிறது. தனி என்பது பெரும்பாழுக்கு விசேஷணமாகக் கொள்ளத்தக்கது, தனி வான் பெரும்பாழென்க. முதலாச் சுற்று நீர் படைத்து.. மூலப்பிரக்ருதி தொடக்கமாக விவரண ஜலத்தை ஸ்ருஷ்டித்து அதன் வழி… இவ்விதமாக யென்றபடி, தொன்முனி யென்று நான்முகனைச் சொல்லுகிறது. “தேவாதிகளைப் பற்றப் பழையனாய் மனன சீலனான சதுர்முகன் தொடக்கமாக’’ என்பது ஈடு. முற்றுந் தேவரோடு உலகு செய்வான்= எல்லா தேவ ஜாதி யோடுங்கூட எல்லா உலகங்களையும் உண்டாக்குபவன். இப்படிப்பட்ட எம்பெருமானெழுந்தருளியிருக்கிற திருமோகூரை, சுற்றி நாம் வலஞ் செய்ய நம் துயர் கடிதே  கெடும்… நாம் சென்று ப்ரதக்ஷிணப்ரணாமாதிகளைப் பண்ண நம் துயர் விரைவில் தொலையும், வழித்துணையில்லை என்று நாம் படுகிற துக்கம் தொலையுமென்கை.

 

English Translation

We have no refuge.  He made the wide and cool expanse then filling it with water, made the gods and ancient seers; then made the worlds and went to live in happy Tirumogur.  If we go around him once, our woes will run away

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top