(1542)
குடையா வரையால் நிரைமுன் காத்த பெருமான் மருவாத
விடைதா னேழும் வென்றான் கோவல் நின்றான் தென்னிலங்கை
அடையா அரக்கர் வீயப் பொருது மேவி வெங்கூற்றம்
நடையா வுண்ணக் கண்டான் நாமம் நமோநா ராயணமே!
பதவுரை
|
முன் |
– |
முன்பொருகாலத்தில் |
|
குடை ஆம் வரையால் |
– |
குடையாகக்கொண்ட கோவர்த்தநகிரியினால் |
|
நிரை |
– |
பசுக்கூட்டங்களை |
|
காத்தபெருமான் |
– |
(பெருமழையில் நின்றும்) காத்தருளின பெருமானும் |
|
மருவாத விடை ஏழும் வென்றான் |
– |
எதிரிட்ட ஏழு எருதுகளையும் வலியடக்கினவனும் |
|
கோவல் நின்றான் |
– |
திருக்கோவலூரில் நின்றதிருக் கோலமாயிருப்பவனும் |
|
தென் இலங்கை |
– |
தென்னிலங்கையிலிருந்தவர்களாய் |
|
அடையா |
– |
பணியாதவர்களான |
|
அரக்கர் |
– |
ராக்ஷஸர்கள் |
|
வீய |
– |
அழியும்படி |
|
பொருது |
– |
போர்புரிந்து |
|
வெம் கூற்றம் |
– |
கொடியமிருத்யுவானவன் |
|
மேவி |
– |
(அஞ்சாமல்) பொருந்தியிருந்து |
|
நடை ஆ |
– |
இதுவே காரியமாக |
|
உண்ண கண்டான் |
– |
(இலங்கையைப்) புஜீக்கும்படி செய்தவனுமான பெருமானுடைய |
|
நாமம் சொல்லில் நமோநாராயணமே-. |
||
English Translation
The Lord who profected the cows by lifting a mountain against the hailstorm, the Lord kwho fought seven warring bulls, the Lord who stands in Kavalur, the Lord who made Yama stride the battlefield and devour the Rakshasa clan, -his Mantra is Na-ma Na-ra-ya-na-me.
