(2)
அடியோ மோடும்நின் னோடும் பிரிவின்றி ஆயிரம் பல்லாண்டு
வடிவாய் நின்வல மார்பினில் வாழ்கின்ற மங்கையும் பல்லாண்டு
வடிவார் சோதி வலத்துறை யும்சுட ராழியும் பல்லாண்டு
படைபோர் புக்கு முழங்கும்அப் பாஞ்ச சன்னியமும் பல்லாண்டே
பதவுரை
| அடியோ மோடும் |
– |
தாஸபூதர்களாய் அடியேன் தொடக்கமாயுள்ள சேதநர்களோடும் |
| நின்னோடும் |
– |
ஸ்வாமியான தேவரோடும் |
| பிரிவு இன்றி |
– |
பிரிவில்லாமல் |
| ஆயிரம் பல்லாண்டு |
– |
(இந்த ஸமபந்தம்) நித்யமாய்ச் செல்லவேணும் |
| வடிவு ஆய் |
– |
உனக்கு நிரூபகபூதையாய் |
| நின் |
– |
உன்னுடைய |
| வல மார்பினில் |
– |
திருமார்பின் வலது பக்கத்தில் |
| வாழ்கின்ற |
– |
பொருந்தியிராநின்றுள்ள |
| மங்கையும் |
– |
நித்யயௌவநசாலிநியான பெரிய பிராட்டியார் தொடக்கமான நாய்ச்சிமார்களும் பல்லாண்டு; |
| வடிவு ஆர் |
– |
(உன்) திருமேனியை வ்யாபித்திருக்கிற |
| சோதி |
– |
ஜ்யோதிஸ்ஸையுடையனாய் |
| வலத்து |
– |
வலத்திருக்கையிலே |
| உறையும் |
– |
நித்யவாஸம் பண்ணுமவனாய் |
| சுடர் |
– |
பகைவரை எரிக்குமவனான |
| ஆழியும் |
– |
திருவாழியாழ்வானும்
பல்லாண்டு-; |
| படை |
– |
ஸேனைகளையுடைய |
| போர் |
– |
யுத்தங்களில் |
| புக்கு |
– |
புகுந்து |
| முழங்கும் |
– |
கோஷிக்கின்ற |
| அ |
– |
அளவற்ற பெருமையுடைய |
| பாஞ்ச சன்னியமுன் |
– |
ஸ்ரீபாஞ்சஜந்யாழ்வானும்
பல்லாண்டு – ; (ஏ ஈற்றசை. ) |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
**** – சேஷபூதர்களான அடியோங்களூம் ஸர்வசேஷியான தேவரீரும் ஒருவரையொருவர் விட்டுப் பிரியாமல் நெடுநாளளவும் மங்கலாக வாழ வேணும்; பெரிய பிராட்டியாரும் தேவரீருமான சேர்த்தி எப்போதும் மாறாமல் நித்தியவாழ்ச்சியாகச் செல்லவேணும்; திருவாழி யாழ்வானும் திருச்சங்காழ்வானும் குறையொன்றுமின்றி வாழவேணும் – என்று இப்பாட்டால் உடலை விபூதிகளோடுங் கூடின நிலைமைக்கு மங்களாசாஸநம் பண்ணுகிறார். ‘‘அடியோமோடும்‘‘ என்று இந்த லீலா விபூதியிலிருக்கிற தங்களையும், மற்ற மூன்றாளாலே, பரமபதமாகிய நித்யவிபூதியிலுள்ள பெரிய பிராட்டியார் முதலானவர்களையும் இப்பாட்டில் கூறியிருப்பதனால் உபயவிபூதியுக்தனான எம்பெருமானுக்கு இப்பாசுரத்தால் பல்லாண்டு பாடினாராயிற்று.
எம்பெருமானுடைய மங்களத்தை மாத்திரமே அபேக்ஷிப்பவரான இவ்வாழ்வார் அடியோமோடும் என்று தம்முடைய மங்களத்தையும் ஏன் விரும்புகிறாரென்னில், மங்களாசாஸநம் பண்ணுவதற்குத் தம்மைப் போன்ற அடியவர்கள் இல்லாவிடில் எம்பெருமானுக்கு என்ன தீங்கு விளைந்திடுமோவென்கிற பயசங்கையினால் மங்களாசாஸநத்தில் ஊக்கமுடைய தம்முடைய மங்களத்தையும் விரும்புகிறார். ஆகவே, எம்பெருமானுடைய மங்களாசாஸநத்தின் அபிவிருத்திக்காகவே தம்முடைய ஸ்தைர்யத்தை வேண்டுகின்றாரென்க.
(வடிவாய்நின் வலமார்பினில் வாழ்கின்ற மங்கை.) பெரிய பிராட்டியாராலே எம்பெருமானுக்கு மேன்மை உண்டாகின்றதென்பது ‘வடிவாய்’ என்ற விசேஷணத்தினால் விளங்கும். புஷ்பத்திற்குப் பரிமளத்தினாலும், ரத்தினத்திற்கு ஒளியினாலும் மேன்மையுண்டாகக் காண்கிறோமிறே. மங்கை – எப்போதும் மங்கைப் பருவமுடையவள்; அந்தப் பருவத்துக்கு வயதின் எல்லை – பன்னிரண்டு முதல் பதின்மூன்றளவும்.
ஆழ்வார்க்குக் கண்ணெதிரிலே விளங்குகிற சங்கை ‘‘அப்பாஞ்சசன்னியமும்’’ என்று (பரோக்ஷமான வஸ்துவைக் கூறுமாபோலே) கூறலாமோவென்னில்; தம்முடைய கண்ணெச்சில் படாதபடி முகத்தைத் திருப்பி வைத்துக்கொண்டு சொல்லுகிறார் என்று கொள்க. அல்லது, அன்று பாரதப் போரிலே அப்படிப்பட்ட அரிய பெரிய காரியங்கள் செய்த பாஞ்சஜந்யம் என்றும், அழகிய பாஞ்சஜந்யம் என்றும் பொருள் கொள்ளலாம்.
English Translation
To the bond between us, many and many a thousand years. To the dainty lady resting on your manly chest, many and many a thousand years. To the fiery orb discus adorning your right shoulder, many and many a thousand years. To the conch Panchajanya that strikes terror in the battlefield, many and many a thousand years.
