மூன்றாந் திருவந்தாதி திருமொழி – 8

(2352)

களிறு முகில்குத்தக் கையெடுத் தோடி,

ஒளிறு மருப்பொசிகை யாளி, – பிளிறி

விழ,கொன்று நின்றதிரும் வேங்கடமே, மேனாள்

குழக்கன்று கொண்டெறிந்தான் குன்று.

விளக்க உரை

(2353)

குன்றொன்றி னாய குறமகளிர் கோல்வ ளைக்கை,

சென்று விளையாடும் தீங்கழைபோய், – வென்று

விளங்குமதி கோள்விடுக்கும் வேங்கடமே,

மேலை இளங்குமரர் கோமான் இடம்.

விளக்க உரை

(2354)

இடம்வலம் ஏழ் பூண்ட இரவித்தே ரோட்டி,

வடமுக வேங்கடத்து மன்னும், – குடம்நயந்த

கூத்தனாய் நின்றான் குரைகழலே கூறுவதே,

நாத்தன்னா லுள்ள நலம்.

விளக்க உரை

(2355)

நலமே வலிதுகொல் நஞ்சூட்டு வன்பேய்,

நிலமே புரண்டு போய் வீழ , – சலமேதான்

வெங்கொங்கை யுண்டானை மீட்டாய்ச்சி யூட்டுவான்,

தன்கொங்கை வாய்வைத்தாள் சார்ந்து.

விளக்க உரை

(2356)

சார்ந்தகடு தேய்ப்பத் தடாவியகோட் டுச்சிவாய்

ஊர்ந்தியங்கும் வெண்மதியி னொண்முயலை, – சேர்ந்து

சினவேங்கை பார்க்கும் திருமலையே, ஆயன்

புனவேங்கை நாறும் பொருப்பு.

விளக்க உரை

(2357)

பொருப்பிடையே நின்றும் புனல்குளித்தும், ஐந்து

நெருப்பிடையே நிற்கவும்நீர் வேண்டா – விருப்புடைய

வெஃகாவே சேர்ந்தானை மெய்ம்மலர்தூய்க் கைதொழுதால்,

அஃகாவே தீவினைகள் ஆய்ந்து.

விளக்க உரை

(2358)

ஆய்ந்த அருமறையோன் நான்முகத்தோன்

நன்குறங்கில் வாய்ந்த குழவியாய் வாளரக்கன், – ஏய்ந்த

முடிப்போது மூன்றேழன் றெண்ணினான், ஆர்ந்த

அடிப்போது நங்கட் கரண்.

விளக்க உரை

(2359)

அரணாம் நமக்கென்றும் ஆழி வலவன்,

முரனாள் வலம்சுழிந் த மொய்ம்பன், – சரணாமேல்

ஏதுகதி ஏதுநிலை ஏதுபிறப் பென்னாதே,

ஓதுகதி மாயனையே ஓர்த்து.

விளக்க உரை

(2360)

ஓர்த்த மனத்தராய் ஐந்தடக்கி யாராய்ந்து,

பேர்த்தால் பிறப்பேழும் பேர்க்கலாம், – கார்த்த

விரையார் நறுந்துழாய் வீங்கோத மேனி,

நிரையார மார்வனையே நின்று.

விளக்க உரை

(2361)

நின்றெதி ராய நிரைமணித்தேர் வாணன்தோள்,

ஒன்றியவீ ரைஞ்ஞா றுடன்துணிய – வென்றிலங்கும்

ஆர்படுவான் நேமி அரவணையான் சேவடிக்கே,

நேர்படுவான் தான்முயலும் நெஞ்சு.

விளக்க உரை

Leave a Reply

Your email address will not be published.

  • No categories

Dravidaveda

back to top