(2354)

(2354)

இடம்வலம் ஏழ் பூண்ட இரவித்தே ரோட்டி,

வடமுக வேங்கடத்து மன்னும், – குடம்நயந்த

கூத்தனாய் நின்றான் குரைகழலே கூறுவதே,

நாத்தன்னா லுள்ள நலம்.

 

பதவுரை

ஏழ் பூண்ட

ஏழு குதிரைகளைப் பூண்ட

இரவி தேர்

ஸூர்யனுடைய தேரை

இடம் வலம்

(மேருவுக்கு) இடப்பக்கமாகவும் வலப்பக்கமாகவும்

ஒட்டி

(அந்தர்யாமியா யிருந்து கொண்டு) நடத்துகிறவனும்

வட முகம் வேங்கடத்து மன்னும்

வடதிசையின் கணுள்ள திருவேங்கடத்தில் நித்யவாஸம் பண்ணுமவனும்

குடம் நயந்த கூத்தன் ஆய் நின்றான்

ஆசையோடு குடக்கூத்தாடின கண்ணபிரான் போன்று நிற்பவனுமான பெருமானுடைய

குரை கழல் கூறுவதே

ஆபரண வொலி பொருந்திய திருவடிகளே ஏத்துவதே

நா தன்னால் உள்ள நலம்

நாவினால் கொள்ளக் கூடிய பிரயோஜனம்.

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- “***“ என்றுஞ் சொல்லுகிறபடியே எம்பெருமானுக்கு ஸூர்யமண்டலமும் ஒரு வாஸஸ்தாநமாதலால் ‘இரவித் தேரோட்டி‘ என்றார். எம்பெருமானுடைய அநுப்ரவேசமின்றி எந்த தேவதையும் எக்காரியமும் செய்ய முடியாதாகையாலே அவன்தானே ஸூர்யனுக்கு அந்தர்யாமியாயிருந்து தேரே நடத்துகின்றானென்க.

ஏழ் பூண்ட –ஏழு குதிரைகளைப் பூண்ட என்றபடி. காயத்ரீ ப்ருஹதீ, உ ஷ்ணிக், ஜகதீ. த்ரிஷ்டுப், அநுஷ்டுப், பங்க்தி – என்கிற ஏழு சந்தஸ்ஸுக்களும் ஏழு குதிரைகளாயக் கொண்டு வஹிக்குமென்று சாஸத்ரம் சொல்லும்.

‘ஓட்டி‘ என்பதை வினையெச்சமாகவுங் கொள்ளலாம், ‘இ‘ விகுதிபெற்ற பெயராகவுங் கொள்ளலாம்.

“குன்றமேந்திக் குளிர்மழை காத்தவன்… பரன்சென்று சேர் திருவேங்கடமாமலை“ என்று கண்ணபிரான்தானே திருவேங்கடமலையில் வந்து ஸந்நிதி பண்ணிருப்பதாக அருளிச் செய்கையாலே இங்கும் “குடநயந்த கூத்தனாய் நின்றான்“ என்று கண்ணபிரானோடு ஒற்றுமை நயம்படக் கூறப்பட்டது.

திருவேங்கடமுடையானுடைய திருவடிகளைத் துதிப்பதே நாவுக்குப் பயன் என்றதாயிற்று.

 

English Translation

Venkatam is the abode of the lord who danced with pots merrily. He drives the chariot of the Sun from East to west and stays in the North. Praising him is the only purpose for these lips.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top