நான்முகன் திருவந்தாதி திருமொழி – 2

(2392)

வாழ்த்துகவாய் காண்ககண் கேட்க செவிமகுடம்

தாழ்த்து வணங்குமின்கள் தண்மலரால், – சூழ்த்த

துழாய்மன்னும் நீண்முடியென் தொல்லைமால் தன்னை

வழாவண்கை கூப்பி மதித்து.

விளக்க உரை

(2393)

மதித்தாய்போய் நான்கின் மதியார்போய் வீழ

மதித்தாய் மதிகோள் விடுத்தாய், – மதித் தாய்

மடுகிடந்த மாமுதலை கோள்விடுப்பான், ஆழி

விடற்கிரண்டும் போயிரண்டின் வீடு.

விளக்க உரை

(2394)

வீடாக்கும் பெற்றி யறியாது மெய்வருத்திக்

கூடாக்கு நின்றுண்டு கொண்டுழல்வீர், – வீடாக்கும்

மெய்ப்பொருள்தான் வேத முதற்ப்பொருள்தான், விண்ணவர்க்கு

நற்பொருள்தான் நாரா யணன்.

விளக்க உரை

(2395)

நாரா யணனென்னை யாளி, நரகத்துச்

சேராமல் காக்கும் திருமால்தன் – பேரான

பேசப் பெறாத பிணச்சமயர் பேசக்கேட்டு

ஆசைப்பட் டாழ்வார் பலர்.

விளக்க உரை

(2396)

பலர்த்தேவ ரேத்தப் படிகடந்தான் பாதம்

மலரேற விட்டிறைஞ்சி வாழ்த்த – வலராகில்

மார்க்கண்டன் கண்ட வகையே வருங்கண்டீர்

நீர்க்கண்டன் கண்ட நிலை.

விளக்க உரை

(2397)

நிலைமன்னும் என்னெஞ்சம் அந்நான்று, தேவர்

தலைமன்னர் தாமேமாற் றாக, – பலர்மன்னர்

போர்மாள வெங்கதிரோன் மாயப் பொழில்மறைய

தேராழி யால்மறைத்தா ரால்.

விளக்க உரை

(2398)

ஆல நிழற்கீழ் அறநெறியை நால்வர்க்கு

மேலை யுகத்துரைத்தான் மெய்த்தவத்தோன்,- ஞாலம்

அளந்தானை யாழிக் கிடந்தானை, ஆல்மேல்

வளர்ந்தானைத் தான்வணங்கு மாறு.

விளக்க உரை

(2399)

மாறாய தானவனை வள்ளுகிரால் மார்விரண்டு

கூறாகக் கீறிய கோளரியை, – வேறாக

ஏத்தி யிருப்பாரை வெல்லுமே, மற்றவரைச்

சார்த்தி யிருப்பார் தவம்.

விளக்க உரை

(2400)

தவம்செய்து நான்முகனால் பெற்ற வரத்தை

அவம்செய்த ஆழியா யன்றே,- உவந்தெம்மைக்

காப்பாய்நீ காப்பதனை யாவாய்நீ, வைகுந்தம்

ஈப்பாயு மெவ்வுயிர்க்கும் நீ.

விளக்க உரை

(2401)

நீயே யுலகெலாம் நின்னருளே நிற்பனவும்

நீயே தவத்தேவ தேவனும் – நீயே

எரிசுடரும் மால்வரையும் எண்டிசையும், அண்டத்

திருசுடரு மாய இவை,

விளக்க உரை

Leave a Reply

Your email address will not be published.

  • No categories

Dravidaveda

back to top